250 பரு 9 நிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துடை மரு விலை நறும்பூத் தூஉய்த் தெருவின் முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும் 255 பெருவிழாக் கழிந்த பேஎமுகிர் மன்றத்துச் சிறுது நெருஞ்சியோ டறுகை பம்பி யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங் கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் 260 பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த் 265 தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து வரைவாய்க் கூகை நன்பகற் குழறவு மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப் 270 பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற மலையகழ்க் குவனே கடறார்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தான்முன்னிய துறைபோகலிற் 275 280 பல்லொளியர் பணிபொடுங்கத் தொல்லரு வாளர் தொழில் கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர் மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண் மாத்தானை மறமொய்ம்பிற் செங்கண்ணாற் செயிர்த்து நோக்கிப் புன்பொதுவர் வழி பொன்ற
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/15
Appearance