உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை. இப்பாட்டுடைத்தலைவன் திருமாவளவன் என்னும் பெயரால் ஈண்டுக் கூறப்பட்டோன். இவன் கரிகாற் பெருவளத்தான் என்பது நச்சினார்க்கினியர் முதலிய உரைகாரர் பலர் கொள்கையாம். அவர் அங்ஙனந் துணிதற்குக் காரணம் சிலப்பதிகாரத்து இந்திர விழவூர் எடுத்த காதைக்கண், "இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலிற் றிருமா வளவன் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள் அசைவி தூக்கத்து நசைபிறக் கொழியப் பகைவிலக்கியதிப் பயங்கெழு மலையென இமையவ ருறையுஞ் சிமயப் பிடர்த்தலைக் கொடுவரி' யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு" என வருமிடத்து இமயப் பிடர்த்தலையிற் கொடுவரிக் கொடி யடையாளத்தைப் பொறித்தவனைத் திருமாவளவன் என்னும் பெயரான் இளங்கோவடிகள் கூறியதே பற்றி யாமென்று உய்த் துணரலாம். சோழர் குடியிற் சான்றோர் புகழ்ந்த பேரரசர் பலர், பெருந் திருமாவளவன் (புறம்.58,60, 197) எனவும், மாவளத் தான ( 4) எனவும், நெடுமாவளவன் (ஷே. 228) எனவும், திருமாவளவன் (பட்டினப்பாலை, சிலப்பதிகாரம்) எனவும் வழங்கப் பட்டுள்ளனர். பெருந் திருமாவளவன் என்னும் பெயர் குராப் பள்ளித் துஞ்சிய சோழன் பெயராம். மாவளத்தான் என்பது. சோழன் நலங்கிள்ளியின் தம்பி பெயராம். நெடுமாலால் என்பது சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளினனவற்கு வழங்கப்பட்டது. திருமாவளவன் சிலப்பதிகாரத்து வடகாலி சென்று இமயத்துப் புலிக்கொடி பொறித்த செய்தி எமிங்கத்துப் பரணியிற்,