உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இளந்திரையனுக் குரியவாக்கிக் கூறலான் இவர் காலத்துக் கப்பி கரிகாலனுக்குரிய தாகாமை இனிதுணரலாம். பட்டினப்பாலைத் திருமாவளவனும் கச்சியிற் சாத்தனை வழிபட்டுச் செண்டு கொண்டு செம்பொற் கிரிதிரித்த கரிகாலனும் ஒருவனே என்பார்க்கு, இவ் வாசிரியர் கச்சியை வேறொருவர்க் குரிமையாக்குதலும், பட்டினப் பாலையுள்ளும்,பொருநராற்றுப்படையுள்ளும் இவரும் பிறருங் கச்சியையே கூறாமையும் பெரிய விரோதங்களாமென்க. கரிகாலன் இமையத்தில் வேங்கைக் கொடியைப் பொறித்த செய்தியும் அவன் கச்சிமாநகருடைமையும், அக் கரிகாலனைப் பற்றிப் பல வரலாறுகளை இனிது வெளிப்படுக்கும் புறப்பாட்டிலும், அகப்பாட்டிலுஞ் சிறிது மில்லாமை நினையத்தகும். சேரர் தம் விற்கொடியை இமயமலையிற் பொறித்த செய்தி. யல்லது மற்றைச் சோழரும் பாண்டியரும் முறையே தம் புலிக்கொடியையும் கயற் கொடியையும் அம்மலையிற் பொறித்தனர் என்பது எட்டுத்தொகை நூல்களிற் கேட்கப்படாத தொன்றாகும். தொல்காப்பியத்து "அமரர் கண்முடியு மறுவகை யானும் (புறத்திணை. 26) என்னுஞ் சூத்திர வுரையில் நச்சினார்க் கினியர் காட்டிய, "புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து, வியலறைத் தவிசின் வேங்கைவீற் றிருந்தாங் கரிமான் பீடத் தரசுதொழ விருந்து, பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉம் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழல், எழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன், பிறந்துபா ரகத்துப் பிறர்வாய் பரவநின், னறங்கெழு சேவடி காப்ப, வுறந்தையோ டூழி யூழி வாழி, யாழி மாநில மாழியிற் புரந்தே" " Xi இப்புறப்பாட்டுக் கிள்ளி வளவனையே பாடிய தென்பது 'வளவ' என்னும் பெயரான் உணரப்படும். முதற்பதிப்புப் பார்க்க.