உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னும் பாட்டினுள்ளும் இமயத்துப் பாறையின் வீற்றிருந்த வேங்கையை அரிமான் பீடத்தரசு தொழவிருந்த வளவனுக்கு உவமையாகக் கூறுதலான் அது கொடியாகிய உயிரில்லாத சித்திர வேங்கை யாகாமை இனிதுணர்ந்து கொள்க. " புலிபுறங் காக்குங் குருளை போல மெலிவில் செங்கோ னிபுறங் காப்ப" (புறம்.2) என இவனுக்குப் புலியை உவமித்தலினும் இவ்வுண் துணரப்படும். ளங்கோவடிகள் தமிழ் மூவேந்தரும் தங்கொடிகள் இமய மலையிற் பொறித்த செய்தி கூறினர். வில்லெழுதிய விமயத்தொடு கொல்லி யாண்ட குடவர்கோ' (குன்றக் குளை) எனவும், "கயலெழுதிய விமயநெற்றி யயலெழுதிய புலியும் வில்லும் (ஆய்ச்சியர் குரவை) எனவும், எனவும், "இமையவ ருறையுஞ் சிமயப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பொர்வோற்கு' யை (இந்திர விழா. 197- 9-) அவர் கூறுதலானுணர்க. அடிகள் வற்றுமையின்ன் இருத்திக அவர்தங் கொடிகளைப் பொறித்த செய்நில முனெந்தருக்கும் கூறுவதுபோல எட்டுத்தொகை நூல்கள் கூறாது, சோர்க்கே அச்சிறப்புக் கூறுவதை அறிஞர் ஆராய்ந்து கொள்வாராகுக. செய்யா கூறத பொய்யா நாவிற் சான்றோர் எனச் சிறப்பித்துக் கொண்டாடப்பட்ட சங்கத்து நல்லிசைப் புலவர் நூன்முறை யாராய்ச்சியில் உண்மையுணர்தற்கு அச்சங்கத்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்களன்றி, அவற்றிற் பிற்பட்ட பிற, துணை யாகாமை நன்கறிந்து கொளக. சிலப்பதிகார முடையார் கரிகாலன் எனப்பெயர் குறித்த இடம் இரண்டேயாகும்.