உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காலன் பெயர் பொறித்த ஈரிடமும் சிலப்பதிகாரத்தின வரலாறு குறித்தல் நோக்கிக் கொள்க. மற்றுச் சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடல் மேம்படு கண்டு எரிகால் அவட்குப் பெரும் பரிசிலும் மாலையும் வழங்கியவன் னென்று பாடத்திற் காணப்படாவிடினும், அடியார்க்குநல்லார் கரி காலன் என்றே உரை கூறினார். மாதவியின் பிற்பகுதி வாழ்நாளிற் புகாரை யாண்டவன் கரிகாலன் அல்லன் என்பதும், கரிகாலன் வழித் தோன்றலே யாலன் என்பதும் இவன் மகன் மணிமேகலையை விழைந்து உயிர் துறந்த உதயகுமரனென்பதும் பிறவும்,மணி மேகலை துறவுள், "கிளர் மணி நெடுமுடிக் கிள்ளி" (24.ஆபுத்திரனாட.29) "மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதயகுமான்" "இளயை நாணி முதுமை யெய்தி 4. பளிக்கறை. 27-28) (ஷ ஷ 107-108) யுரைமுடிவு காட்டிய வுரவோன் மருக என வருவனவற்றால் நன்கறியலாம். இவற்றுள், ளமை நாணி முதுமை யெய்தி யுரை முடிவு காட்டிய வுரவோன் கரிகாலனே யென்பது அக்கரிகாலன் பெயர்குறித்த பொரு நராற்றுப்படையுள், "முதியோனவைபுகு பொழுதிற் பகைமுரண் செலவும்' என வருதலானும், -நரைமுடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் என்னும் பழமொழியானும் உய்த்துணரலாவது. நெடுமுடிக் கிள்ளியைக் கரிகாலற்கு மகனென யாண்டுங் கூறாமையானும், அவன் மகனாகிய உதயகுமாரனை,