10 வேந்தர்க்கும் இடையாறும் புகார்ப்பட்டினமுமாகிய வேறு வேறு ஊர் கூறுதலான், இந்நக்கீரர் காலத்தே இவ்விரு வேந்தரும் இவ் வேறு வேறு ஊர்களிலிருந்தது நன்கு புலனாம். இவ்வூர்கள் நக்கீரர் காலத்தே, என னவும், " "இடையாற் றன்ன நல்லிசை வெறுக்கை" (அகம்.141) "காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன ...... விழுநிதி" (க்ஷை 205 எனவும் கூறலாம்படி அத்துணைப் பெருஞ்செல்வ நிலையிலிருத் ததும் நன்கு அறியலாகும். இறந்த காலத்துப் பெருநிதியைக் றிய இடங்களிற் பல்லிடத்தும், கூ மரந்தை முற்றத்து நிலத்தினத் துறந்த நிதியத் தன்ன. வெறுக்கை." வாணன் வைத்த விழுநிதி பெறினும்' (அகம்.127) (மதுரைக்காஞ்சி. 202-201) எனப்பாடுதல் கண்டு இப்புலவர் தாமுள்ள காலத்து அரசர் பெருமக்கள் வதியும் ஊர்களையே கூறினரென்று துணியலாம். இஃதன்றி "உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி” பாணாற் பாடப்பட்டோன் (புறம்.4) ஆதலான் அப்பரணர் காலத்தில் அவர்க் கிளையராகக் கருதப்பட்ட நக்கீரர் அச்சென்னியின் மகனு காலனைப் பாடுதல் பொருத்தமுடைத்தேயாகும். கண்ணகி காரணமாகப் பாடிய பலருட் கபிலரும் பரணரும் உள்ள னர். இவர் தம்முள் வாதுசெய்தனர் என்பதும் உண்டு. இன்றும் பரணன் பாடினன் மற்கொல்' (புறம் 99) எள ஒளவையார் பாடுதலாற் பரணரும் ஒளவையாரும் ஒரு காலத்தவராவர். ஒளவையார் உக்கிரப் பெருவழுதியைப் பாடியவர். (புறம்.367) இவற்றால் கபிலர், பரணர், ஒளவையார், உக்கிரப் பெருவழுதி இவர் ஒரு காலத்தவராவர். இவருட் பரணர் கரிகாற்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/26
Appearance