உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 யாற்றிற்குப் பொருந்துவதல்லது உறையூர் புகார் இவற்றிற்குப் பொருந்தாமை நோக்குக. இனிமேற் கூறப்பட்ட பல் பெயருள் திருமாவளவன் எனப் பட்டினப்பாலையுட் குறிக்கப்பட்டவன் இவன் என்பதேயாம் ஆராய வேண்டுவதாகும். கோவலன் காலத்துச் சோழனுடன் இச் சோழர்குடியில் ஆயிரத்தெட்டுச் சோழர்கள் காவிரி நீரால், திருவபிஷேக மஞ்சன செடுத்த இளங்கோவடிகள் இந்திர விழலு மாடினரென்று காதையில். "மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கு மாயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறை oul " எவ்வன பேரெண் என்பதனாற் கூறினர். இவ் யிரத் தெண்மருள் ஒவ்னொரு வற்கு இருபத்தைந்தாண்டாயுளாகக் கொண்டாலும் இச் சோழர் காலம் 25200 ஆண்டுகளாகும். இதனால் இளங்கோவடிகள் கோவ லன் காலத்துச் சோழனுக்கு முன்னே இச் சோழர்குடி. வாகப் பழையதாயிற் றென்று கருதியது புலனாம். ணிற் கண்ட இச் சோழர் அளவையையும், சங்க நூல்களிற் கண்ட சில இருபத்திரண்டு சோழர் அளவையையும் நோக்கின் வரலாறு ஒன்றுமில்லாததுபோல அறவுஞ் சிறியதாதல் காணலாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சேரனுடைய கருவூரை முற்றியபோது மாறோகத்து நப்பசலையார், ஒரு "இமயஞ் சூட்டிய வேம விற்பொறி. மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய வாடா வஞ்சி வாட்டுநின் பீடு கெழு நோன்றாள் பாடுங்காலே' இவர் (புறம்.39) எனப் பாடுதல் கொண்டு இமயம் விற்பொறித்த புகழ் சேரர்க்கே உரியதாதல் எளிதில் உணரலாம். சோழர் தம் விற் கொடியை இமயத்திற் பொறித்த சிறப்பு அக் காலத்தே உடைய