14 ராயின் இவ்வாறு ஒரு பேரறிஞர் சேரனைச் சிறப்பித்து வெல்லுஞ் சோழன் முன்னர்ப்பாடல் தொடுக்காரென்று நன்குணர்க. இக் குன முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையே ஆலத்தூர்கிழார் பாடிய புறப்பாட்டில் (64), என "இமயத் தீண்டி யின்குரற் பயிற்றிக் கொண்டன் மாமழை பொழிந்த நுண்பஃறுளியினும் வாழிய பலவே வருதலானும் இவ் வுண்மை யுணரலாம். புலிக்கொடி பொறித்த செய்தி சோழர் உடையராயின் இமயத்தைப் புளி பொறித்தலால் விசேடியாது ஒழியாரென்க. சங்க காலத்து இல்லா தது அதன் பிற்காலத்துச் சோழராற் செய்யப்பட்டுப் புலவரான் இசை சிறக்கப் பாடப்பட்டதிஃதென்று நன்கு துணியலாம். இருள் கோவடிகள் தம் அருமைத் தாய் பிறந்த சோழர் குடிக்குச் சிறாப்புக் கூறவேண்டியே புகார்க் காண்டத்துச் சோழர் வென்றியைமிகுத் துக் கூறினரோ என்று நினைத்தற்கும் இஃதிடந்தருவது. இதனாதி சங்கநூல்களோடு இயைபுடைய பகுதிகளே சோழர் குடி வரலாற் றிற்குச் சிலப்பதிகாரத்தினின்று கொள்ளத்தகுமல்லது சங்க நூற்கு மாறாக வுள்ளவற்றைச் சிலப்பதிகார நூல் ஒன்றே கொண்டு உணர்வதன் கண் இடர்ப்பாடு பலவாம் என்றவாறாம். வரலாறு இனிச் சங்கநூல் மட்டும் வைத்து இச் சோழர் துணியின் பொருநராற்றுப்படைத் தலைவன் கரிகால் வளவனும், பட்டினப்பாலைத் தலைவனாகிய திருமாவளவனும் வேறாதல் இனிது புலனாம். இரு பாட்டின் றலைவரும் இன்ன இன்ன வகையான் வேற்றுமைப்படுவரெனப் பொருநராற்றுப்படை முகத்து நன்கு விளக்கினேன். இதனையே ஈண்டு விரித்துரைப்பேன். பட்டினப்பாலைத் தலைவற்கும் ஆற்றுப்படைத் தலைவற்கும். உள்ள வேற்றுமைகளை அடியிற் காண்க. பொருநராற்றுப் படைத் தலைவனாகிய கரிகாலன் (1) "உருவப் பஃறே ரிளையோன் சிறுவன்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/30
Appearance