. 15 . எனத் தந்தை பெயர் கூறப்பட்டவன். இத் திருமாவளவன் தந்தை பெயர் கூறப்படாதவன். (2) "தாய்வயிற் றிருந்து தாய மெய்தி" என்பதனாற் கரிகாலன் இளமையிலே தந்தையை யிழக்கக் கருவிலே அரசெய்தினனாகக் கருதிப் பெற்றுப்பிறந்த போதே அர சுரிமை யெய்தியவன். இதற்கேற்பவே, பிறந்து தவழ்கற்ற தற்றொட்டுச் சிறந்த நன்னாடு செகிற்கொண்டு எனப்பாடப்பட்டவன். இவன்; பிறர், "பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி வாள்கழித்து. திண் காப்பேறி ஊழி னாகிய தாய மெய்தி" என்பதனாற் பிறராற் சிறையிலிடப்பட்டிருந்து அத்திண்ணிய சிறைக்காவலைத்தான் கடந்து பின் தன் வாள் வலியானே தனக்கு முறைமையாகிய அரசெய்தியவன். 3. கரிகாலன் பொருநராற்றப்படையுள் ஊர் கூறப்படாத வன். இவன் "பட்டினம் பெறினும் " என்பதனாற் காவிரிப்பூம் பட் டினமென்னும், கடற்றுறைமுகப் புகாரும், "பிறங்கு நிலை மாடத் துறந்தை போக்கி" என்பதனால் உறையூரும் உடையனாகக் கூறப் படுவான். (4) கரிகாலன் இளமையிலே சேரர் பாண்டியரிருவரையும் வெண்ணிப்போரில் வென்றதாகக் கூறப்பட்டவன். இவன், தென் னவர், குடவர், வடவர், இருங்கோவேள், பொதுவர், அருவாளர், ஒளியர் என்னும் எழுவரை அடக்கியதாகக் கூறப்படுவான்.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/31
Appearance