உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 மிகவும் ஆராயத்தக்க தொன்றாம். இவ் வரிய செய்தி கரி காலன்கண் நிகழ்ந்ததா வேறொரு சோழன்கணிகழ்ந்ததா என்று வினாவி ஆராயப்புகின் உண்மை யுணர வல்லதாகும். சோழருட் பிறர் பிணியகத்திருந்தவனாக ஒருவன் 174-ஆம் புறப்பாட்டிற் கூறப்பட்டுள்ளான். அவனை விடுவித்தற்கு இனிது உதவியவன் திருக்கண்ணன் என்பது அப்புறப்பாட்டான் அறியக்கிடப்பது. அப்பாட்டில், "அணங்குடை யவுணர் கணங்கொண் டொளித்தெனச் சேண்விலாங்கு சிறப்பின் ஞாயிறு காண திருள்கண் கெடுத்த பருதி ஞாலத் திடும்பகொள் பருவா நீரக் கடுந்திற லஞ்சன வண்ணன் தந்து நிறுத்தாங் கரசிழந் திருந்த வல்லற் காலை காவிரி மல்ல னன்னாட் டல்ல றீர எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை யருவழி யிருந்த பெருவிறல் வளவன் மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை புதுமையி னிறுத்த புகழ்மேம் படுந் " என வரு மடிகளான், ஒரு சோழன் பகையரசரோடு பொருது உடைந்துபோக அவனை யப்பகைவேந்தர் பிறராற் காண்ட ற்கரிய முள்ளூர் மலைக்காட்டில் ஓரிடத்து ஒளித்து வைத்தனரென்றும் காவிரி நாட்டு வருத்தந் தீர அவனை விடுவித்து அவன் குடையைத் தோற்றுவித்த பேருதவி திருக்கண்ணன் (அல்லது திருக்கின்னி) உடையதென்றும் விளங்கக்கூறி அதனால் அவனை விசேடித்து ன் நன்கறியலாகும். இச்சோழன் யாவன் எனவினாவின் பாடிய மாறோகத்து நப்பசலையார் காலத்தவனாதலல்லது அவர்க்கிறப்ப முந்தியவன் ஆகானென்றுய்த்துணர்தல் தகும். இந் நப்பசலையாரே சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவனைப் பல பாடல்களாற் (புறம்.37,39,220) பாடுதலள