உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 நினைந்தும் இவனை விடுவித்து இவன் குடையைத் திருக்கண்ணன் (திருக்கிள்ளி) விளக்கினன் என்பது நன்கு பொருந்துமெனக் கொள்க. 174-ஆம் புறப்பாட்டிற், "பொய்யா நாவிற் கபிலன் பாடிய .....முள்ளூர்" என்றதனால் இவன் ஈண்டு அருவழியிருந்தகாலம் கபிலர் காலத்திற்குப் பிந்தியதாதல் நினைந்து கொள்க. ஈண்டு, முள்ளூர் மீமிசை யருவழி" என்றது முள்ளூர் மலைமேற் பிறரொருவரும் புகற்கரிய காடுசூழ் எயிலென்று நினையத்தகும். இதுவே பட்டினப்பாலையுள், செறிவுடைத்திண்காப்பு" என்று கூறப்பட்ட தாகும். இச்சோழன் முதற்கட்பிணியிலிருந்து பின்னர்த்திண்காப்பேறி வாள் கழித்துத் தன்றாய மெய்தியவன் ஆதலால் முன்பிணியிருந்தபோது, இகழ் பாடுவோ ரெருத்த மடங்கப் புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற" (புறம்.40) என்று கூறியவாறு இகழ் பாடுவோரும் தாயமெய்தியபோது புகழ்பாடுவோரும் உளரானாரென் றுய்த்துணரலாம். பட்டினப் பாலையுட்கூறிய பலவும் இக்கிள்ளிவளவற்கு நன்கு பொருந்துமாறு காட்டுவல். ஈண்டுப் பட்டினம் பெறினும் என்றார். அகப்பாட்டில் (205) நக்கீரர், "நிலங்கொண்டு வெஃகிய பொலம்பூண் கிள்ளி பூவிரி நெடுங்கழி நாப்பட் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன " என வந்தது காணலாம். இவற்றால் இவன் காலத்துக் காவிரிப் பட்டினங் கடல் கொள்ளப்படாமலிருந்திருத்தல் புலனாம். இப்பட்டினம் கடல் கோளால் அழிந்தது மாதவியின் முதிர்ந்த நிலையிலென்று துணியலாம். வயது