உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 எனக் கூறுதலா ன றியப்படுவது. இவன் பட்டினப்பாலைக்குப் பெரும் பொருள் நல்கிய வண்மைக்கியையவே புறம் 397-ஆம் பாட்டில். மாரியன்ன வண்மையிற் சொரிந்து எனச் சிறப்பித்தல் காணலாம். கலிங்கத்துப்பரணியிலும் தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறு நூறா யிரம்பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும் " என்றதன்றிச் சோழன் பெயர் கூறாமை நினைக்க. இதன்கட்பண்டு என்றதனாற் காலப்பழமை குறித்ததன்றி வேறு விளக்கா. ை நோக்குக. இனி இவன், "வேந்தர் சூடிய பசுமணி பொருத பரேரெறுழ் கழற்கால்" உடையவனாக இந்நூலுட் கூறப்பட்டான். இதன்கண் வேந்தர் சூடிய பசுமணி என்றது அவ்வாசர் சூடிய பொன்முடியிலழுத்திய மணி எ - று. பொருத கழல் அவர் முடிப்பொன்னையும் மணியையோ கழலாகச் செய்த காலணி. இதனை யணிந்துள்ள அடிகளையுடையவன் எ-று. இக் கருத்திற்கியையவே இக்கிள்ளிவளவனைப் பாடிய புறப்பாட்டில், "நீயே பிறரோர் புற்ற மன்னெயி லேர்ம்பாது கடந்தட் டவர்முடி புனைந்த பசும்பொன்னினடிபொலியக் கழறைஇய வல்லாளனை " எனச்சிறப்பித்தல் கண்டு உண்மை யுணர்ந்து கொள்க. இந்நூலுள், நுண்ணிதி ணுணர்நாடி " என்றதற் கியையவே இவன் நல்லிசைப் புலவனாதல் "யான்வாழு நாளும் பண்ணன் வாழிய (புறம்.172)