உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 என இவன் பாடிய பாட்டுப் புறத்திற் கோக்கப்பட்ட வாற்றா னறியலாம். இப்புலமைச் சிறப்புக் கரிகாலனுக்குக் கூறப்படாமையு நினைக்க. இவன், " வாளுறை கழித்துத் தாய மெய்தி" என்றதற் கியையவும், " தாள்முன்னிய துறை போகலின் ' என்றதற் கியையவும், . உடன்று நோக்குவா யெரிதவிழ வேண்டியது விளைக்கு மா மாற்றலை" என இக்கிள்ளிவளவன் பாடப்படுதல் காண்க. இனி, இங்குக் கூறிய (புறம்.38) "செற்றோர் கடியரண் தொலைத்தல்' இவனையே, "செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே (புறம்.41) என வருதலானுணர்க. நிற்கத் திருமாவளவன் என்றிந் நூலுட் கூறியதற்கு இயைய இக்கிள்ளிவளவன் (புறம்.228) "கொடி நுடங் கியானை நெடுமாவளவன் எனப்பாடப்படுதல் காண்க. நெடுநகர், திருநகர் என்றாற்போல நெடுமையுந் திருவும் சிறந்த அடைகளெனின் இனிது பொருந்தும். வேள்பாரியை "நெடுமாப்பாரி" (புறம். 201) என்பது காண்க. பலலிடத்தும் கிள்ளி என்றும் வளவன் என்றும் வழங்குதல் நோக்கி யுணர்க. இனி, இந்நூலுள் இவன், "தென்னவன் றிறல்கெடக் குடவர் கூம்ப" வீரத்தாற் சிறந்தனன் என்பதற்கியைய,