25 இனித் தாய் வயிற்றிருந்து தாய மெய்திப்பிறந்து தவழ் கற்றதற்றொட்டு நாடு செகிற் கொண்டவனும் (பொருநாறு) ஆகிய கரிகாலன், "பிறர், பிணியகத் திருந்து பீடு காழ்முற்றி யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிப்புக் காங்கு நுண்ணிதி னுணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித் துருகெழு தாய மூழி னெய்தி என்ற திருமாவளவனைப் பாடிய பட்டினப்பாலை படிகளும், குழிகொன்று, பெருங்கை யானை பிடிபுக் காங்கு" என இவன் திண்காப்பேறிச் சென்று கூடியதற்கு உவமை கூறலான் இவன் மணந்த பின்னரே பிணியகத்திருந்தான் என்றும் பிணியைக் கடந்து யானை பிடிபுக்காற்போலத் தன் மனைவியொடு கூடினான் என்றும் கொள்ளவைத்தவாற்றா னுணரலாம். இங்ஙனங் கொள்ளாக்காற் "பிடிபுக் காங்கு" எனக் கூறியது நயமில்லையாய் முடியும். பிணியிருந்து பின்னர்க் கடந்து தமரொடு கூடிய மாந்தாஞ் சேரலிரும்பொறைக்கும் புறப்பாட்டில், "கொல்களிறு, நிலைகலங்கக் குழிகொன்று கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு" b. 17) என இவ்வாறே உவமித்தலும் ஆண்டு பிடிபுக்காங்கு எனக் கூறாமையும், பொதுப்படக் "கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு எனவே கூறியொழிதலுங் கண்டு அதனோடு இதற்குள்ள வேற்றுமை உய்த்துணர்க. மற்றும், "கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு "
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/41
Appearance