26 என்றது பற்றி இவன் இளமையிலே பிணியகத்திருந்தான் என்று துணியின், "பெருங்கை யானை பிடிபுக் காங்கு என்பதற்கு ஓராண் யானை தன் தாய்ப்பிடியை யடைந்தாற் போல என்று பொருள் கூறிக்கொள்க. கூட்டுள் வளர்தற்கு மட்டும் கொடுவரிக் குருளை யுவமமாயிற்றெனின் முன்னுரையே பொருந்தும். இனிச் சிறைகடந்தவுடன் மணந்தான் என்று கொண்டு இங்ஙனங் கூறினாரென்றலும் ஒன்று, ஏற்பது கொள்க. இத் துணையுங் கூறியவாற்றாற் றிருமாவளவன் என்னும் பெயரொன்றே கொண்டு கரிகாலன் எனக் கூறப்படாமையும் கரிகாலனுக்கும் இப் பட்டினப்பாலைத் தலைவற்கும் வரலாற்று முறைமையிலுள்ள வேற்றுமையும் பட்டினப்பாலையிற் குறித்த பலசெய்தியும் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவற்கே பெயருடனியைதலும் பிறவுங் கண்டுகொள்க. இனி இப்பாட்டு "நெஞ்சே திருமாவளவன் வேலினும், வெய்ய கானம், அவன் கோலினுந் தண்ணிய இவள் தடமென்றோள் ஆதலான் பட்டினம் பெறினும் வயங்கிழையொழிய நின்னுடன் வாரேன்" என்று தலைவன் பொருள் கருதிச் செலவுவலித்த நெஞ்சினை நோக்கிச் செலவழுங்கிக் கூறியது இப்பாலைப் பாட்டு என அறிக. இப்பாட்டின் முதற்கணுள்ள 218 அடிகளும் பட்டினத் தை விசேடித்து எழுந்தனவாம். 220ஆம் அடியின் இறுதிச்சீர் முதலாக 298 ஆம் அடியீறாகவுள்ளன திருமா வளவனை விசேடித்தனவாம். மணிமேகலை யுடையார், "மன்னன் கரிகால் வளவனீங் கியநாள் இந்நகர் போல்வதோ ரியல்பின ய தாகி" (விழாவறை) எனக் கூறுதலாற் கரிகாலன் புகாமை விட்டு நீங்கிப் பெருவன் நல்லூரிலும் இடையாற்றிலும் தங்கிய காலம் உண்டென்று தெளி தல் தகும். நக்கீரர் இச்சோழனையே கருதி இவன் பட்டினத்தையே செல்வத்திற் சிறந்ததற்கு எடுத்துரைத்தது,
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/42
Appearance