உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கோக்கிய வேல் என்று வெம்மைக் கெடுத்துக் கொண்டார். அவன் கோனிழல் அடைந்தார் பிரிதற் கரிதான தட்பமுடைமை தெரிய அவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே என்றார். அவன் கோலாட்சியின் விசாலமும் மென்மையுந் தோன்றவும் தட மென் றோளே என்றாரென்க. பட்டினம் பெறினும் என்றதனால் அதன் பெறுதற்கரிய சிறப்புரைத்தவாறாம். ஒரு பேரரசர்க்குச் செல்வவளனும், அதனையாள்வதிற் செங்கோலும் இனங்காத்தலின் வேலும் இன்றியமையாதன என்று கருதி இம் மூன்றானுந் திருமா வளவன் சிறப்புக் கூறினார். வேல்போற் றுன்பமுங் கோல்போ லின் பமுங் கொள்க. கோலினுந் தண்ணிய வென்றதனால் இவன் அறம் புரி செங்கோல் என்றதாதல் உணர்க. வேலினும் வெய்யகானம் என மறத்தை முற்கூறினார், அரசற்கு சிறந்ததுபற்றி இது பொருள் வளித்துக் காலிற் செல்ல நினைத்த நெஞ்சிற்குக் கூறியது. அப் பாட்டுக்களிலுங் கலித்தொகையிலும் இன்பப் பகுதிகள் மிகுத்து வரச்செய்யப்படும் பாலைப்பாட்டுக்கள் போலாது அகத்திணை சுருங்கிப் பாட்டுடைத் தலைவனையும் அவனூரையும் விசேடித்த புறத்திணைப்பகுதிகள் மிகுத்துச் செய்யப்பட்டபாடல் இஃதாகும். இதனாலிவ்வாசிரியர் உருத்திரங் கண்ணனார் திருமாவளவனையும் அவனுரிமையினையுமே புகழ்வான் புகுந்து புலத்துறைக்கேற்ப அகத்திணைப் பகுதியைச் சிறிதுகூறி நயப்படுத்தினாரென்று நினைய லாம். பட்டினத்தை விசேடித்தன பெரும்பாலும் அந்நகர்ச் செல்வச் செருக்கைக் குறித்தெழுந்தனவாம். திருமாவளவனை விசேடத்தன பெரும்பாலும் அவன் தறுகட் பெருமிதத்தைக் குறித்தெழுந்தன வாம். கூ கரிகாலன் செய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியின் புக ல்வன் 'உருவப் பஃறே ரிளையோன் சிறுவன் என்பது பொருநராற்றும் படை. இளஞ்சேட்சென்னியை, "நெய்தலங் கான நெடியோய் " (புறம்.10) எனப்பாடுதலான் இவன் நெய்தலங்கானல் என்னும் ஊரிலிருந்தவன் என்று தெரிகிறது. 'நெய்தல்' என்னும் ஊர் குழித்தலைப்பற்றில்