உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 இன்றும் உண்டு. இதுவே இப்பெயரான் வழங்கப்பட்டநோ தெரிகிலேம். "கைதை வேலி நெய்தலங கானல்" எனச் சிலப்பதிகாரத்துப் புகார் பட்டினப்பாக்கத்துப் பகுதியைக் கூறுதலான் இவன் அப்பட்டினததுக் கடற்றுறைப் புறந்து அரண்மனை யமைத்து வதிந்தது பற்றி இங்ஙனங் கூறப்பட்டானோ என்று நினைத்தற்கும் இடனுண்டு. புறப்பாட்டுரைகாரர், “நெய்தலங் கானல் என்னுமூர்' என்று பொருள் கூறியுள்ளார். இவ்விளஞ்சேட்சென்னி கரிகாலன் தாய்வயிற்றிற் கருவி லிருக்கும்போதே இறந்தவனாதல் வேண்டு மென்பது இவனைப் பொருநராற்றுப் படையுள், "தாய்வயிற் றிருந்து தாய மெய்தி" எனப்பாடுதலான் அறியப்படுவது. இக்கரிகாலன், "சுடப்பட் டுயிருந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் கடைக்காற் செயிரறு செங்கோல் செலீஇயினான் என்பதனால் இம்மையிற் பகைவராற் றீயாற் சுடப்பட்டுயிர் தனன் என்றும் பின்னர் இரும்பிடர்த்தலையார் உதவியாற் உய்ந்தனன் செங்கோல், செலுத்தினன் என்றும் தெரிகிற்பது. தீயிற் சுடப் பட்டதனாற் கா. கரிந்தகா லுடையனாதல் பற்றிக் கரிகால் எனவும் கரி காலன் எனவும் வழங்கப்பட்டனன் என்று தெரியலாம். "கரிகாலன் கானெருப் புற்று " என்பதும் இதனை ஆதரிப்பது. இவ்விளஞ்சேட்சென்னிக்கு மூத்தவனான சேட்சென்னி நலங்கிள்ளி என்பவன், "கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலந்தகாஅ, ரிடைப்புலப் பெருவழிச் சொரியுங் கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே" (புறம்.30)