உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 விட்டு நீங்கி மறைந்தது கண்டு அவ்வூர் அவனைத் தேடித் திரள் திரளாகச் சென்றதனால் ஊர் வறிதாயிற்றென்றாற் பொருந்து மென்க. படையெடுப்புக் கூறிய சிலப்பதிகாரத்துச், "செருவெங் காதலிற் றிருமா வளவன் புண்ணியத் திசைமுகம் போகியவந்நாள் (இந்திர £9-94) என விளங்கப்பாடுதல் கண்டுகொள்க. இங்ஙனம் விளங்க வையாது நீங்கிய நாள் என்றே ஒழிவது அவன் சாவினையேனும் அல்லது அவனுக்குற்ற பெருங்கேட்டையேனும் குறிக்காமற் படை யெடுப்பையே குறிக்குமென்பது அத்துணைப் பொருத்தமாதவில்லை. செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்புக் கூறிய கால்கோட் காதையினும், " தானவர் தம்மேற் றன்பதி நீங்கும் வானவன் போல வஞ்சி நீங்கி' ஆண் என விளங்கக் கூறுதல் காண்க. தேவர் ஊர் வறிதாதற்கு உவமை கூறியது இஃதாதல் கண்டு கொள்க. தேவர், ஊரில் ஆணும் பெண்ணும் இவ்வூர் விழாக்காண வருவதால் அவ்வூ வறிதாதல் கூறத்தகும். கரிகாலன் படையெடுப்பில் மக்களுள்ளும் படைப் பொருநரேயன்றி எல்லாப் பெண் மக்களுஞ் செல்லுதலில்லாமையாற் புகார் ஊர் வறிதாதல் யாங்ஙனமென் வினாவுக. ஆணும் பெண்ணும் அரசனைக்காணாது துயருற்றுத் தேடிச்சென்றனர் என்றேனும் அவன்பா லன்புபூண்டு அவனைப் பின்பற்றிச் சென்றனர் என்றேனும் கொள்க. அவ்வாறு வறிதாயிற் றென்பதே இனிது பொருந்துமென்க. இவ்வாறெல்லாம் கூறாமல், மன்னன் கரிகால் வளவனீங் கியனால் என்று பாடங்கொண்டு கரிகால் வளவன் ஈங்கு இயல நாள்- கரிகால் வளவன் இவ்வுலகில் இயன்ற காலத்து எனவுரைத்தாலும் நன்கு பொருந்துமென்க. கரிகாலன் ஆண்டகாலத்து இங்நகர் சிறப்புற்றது போன்ற இயல்பினை இப்பதி இப்போதுடைத்தாக கூறிக்கொள்க. என்று பொருள் திரித்துக்கொள்க, ஆகி என்பதை ஆகரிவன்று