இவன் முன் னர் 33 மன்னர் இதன்கண் அருப்பம் பேணாதமர் கடந்தது இவன் இளமையிற் செய்த வெண்ணி வாயிற்போர் வாகைப் போரிரண்டையுங் குறிக் கும். மற்றவையெல்லாம் அப்போர்ப்பின் னிகழ்ந்தனவென்று கொள்ளலாம். வாகைப் பறந்தலையில் ஒன்பது குடை முன்னிலைச் சென்று பின் போர்புரிய மாட்டாரா யோடி என்று (அகம். 125) கூறுதலான் இவன் படை, படையெடுத்து வந்த பிறரை அழியாமல் ஓடச்செய்த வெற்றியையுமே குறித்தல் காண்க. கலிங்கப்போரின் பின் அசோகன் மனநிலை மாறியது போல வெண்லரிப் போரிற் சேரலாதன் வடக்கிருந் துயிர்நீக்க அவனோடு பன்னூறு சான்றோர் மடிந்ததன் பின் இவனுக்கு மனமாறியது பொருந்துமென்க. வெண்ணிக் குயத்தியார் பாடிய புறப்பாட்டினும், வென்றோய் நின்னினு நல்ல னன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புக ழலக மெய்திப் புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே (புறம். 66) என அறிவுறுத்தியதனானும் இந்நிலை யிவற் குண்டாதல் ஒரு தலையென்க. இங்ஙனமில்லாது உளவரையும்படையெடுத்துச்சென்று நாளும் விடாது போர்செய்து தன் வீரத்தையே பெரும்பாலும் உலகினிறுத்திய கிள்ளிவளவன் சாவிற் பலர் பாடிய பாடல்களை ஈண்டைக்கேற்ப நோக்கியுங்கொள்க. இம்முறையான் ஆராயின், "மன்னன் கரிகால் வளவனீங் கியநாள் இந்நகர் போல்வதோ ரியல்பின தாகி" (மணிமே மே- விழாவறை) என்பதற்குக் கரிகாலன் அரசு நீங்கிய நாளில் இந்நகர் போல்வதோ ரியல்பினதாய் என்று பொருள் கூறுவதும் பொருந்தும். இதுவே சங்க நூல்கள் இவனுக்குப் புகாருடைமை கூறாமைக்குக் காரண மென்று துணியத்தகும். ஏற்பது கொள்க.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/48
Appearance