உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மாகிய வானம் இந்நாட்டுப் பெய்யாது பொய்த்துழியும் தான் நீர் உதவற்கட் பொய்யாத காவிரி என்றவாறாம். மலைத்தலைய காவிரி கடற்காவிரி என்க. மலைத் தலைய காவிரி தலைக்காவிரி என இன்றும் வழங்குதல் நினைக்க. கடற்காவிரி- கோவின் கட்புக்க மகன் கோமகன் என்பதுபோல இத்தொடரைக் கொள்க. கோவை மணந்த மகள் கோமகளாதல்போலக் கடலை மணர்த காவிரியெனினு மமையும். மலையிலே தலையுடையதாகியும் கடலிற் புகாது பிறயாறு களிலே கலக்கும் உபநதிகளை விலக்கிக் கடற்காவிரி என்றார். சேரர் ஆன்பொருநை கடலிற் புகாமை நூல்களினோக்கிக் கொள்க. யாறுகளைப் பெண்ணாகவுங் கடலை ஆணாகவுங் கூறுதல் வட மொழி யாளர்க்குந் தமிழர்க்கும் ஒக்கும். இதனாற் கடல் கணவன் அரைகாரர் கூறிக்காட்டினார். காவிரி பொன் கொழிக்குஞ் சோணாடு என்பர். காவிரி பொன் கொழிக்கும் விளைவறா வியன் கழனியென வியைப்பினும் பொருந்தும். என் பொன் கொழிக்கும் விளைவு-காவிரி பொன் கொழித்தற்குக் காரணமான விளைவு. புனல் பரந்து-புனல் பரத்தலான் என்க. புனலாகப் பரந்து பொன்னாகக் கொழிக்கும் என்ற நயத்தையு நினைக்க. புனலே பொன்னையாக்குதல் கருதுக. கோடையிலுங் கூலம் விளைத்தலின் "விளைவறாக் கழனி" என்றதாம். கார்க்கரும்பு-பசிய கரும்பு என்றார் உரைகாரர். கார் நீர் பெய்தல் போல சாறு பெய்தலையுடைய கரும்பு என்பது பொருக் கார்வண்கை யென்பதனாலுணர்க. தும். 11--15, நீர்ச்செறுவினீ ணெய்தற் பூச்சாம்புநற்குக் கார்க் கரும்பின் கமழாலைத் தீயை ஏதுவாக வைத்தார். நீர்ச் செறுவி ரீளுதலால் வாடாத அப்பூச் சாம்புதற்கு நயமான ஒரேது காட்டி யது சிந்திக்க. "நீருட் குவளை வெந்தற்று" (குறிஞ்சிக்கலி. 5)