உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 எனப் பெரும்பாணாற்றில் இவரே விளக்கிக் கூறுதலான் அறிக. பெரும்பாணாற்றுப்படையும் பட்டினப்பாலை யு ம் பாடியவர் ஒருவரே யாதலின் இவ்விருநூற்கும் ஒற்றுமைகள் மிகப் பலவாகும். ஆங்காங்கே காட்டிச் செல்வேன். எறிந்த கொடுங்காற் கனங்குழை எறிதலிற் கொடிய காற்றை யெழுப்பிய கனவிய குண்டலம், கொடுங்கால் காதின் மாட்டுதற்குரிய பொன்னால் வளைவாகச்செய்யப்பட்ட கோக்கியுமாம். அகமணி 26-30 விலக்கும் விலங்கு பகை விலக்குதலான் வழி விலங்கிச் செல்லுதற்குரிய பகையல்லது வேறு மனங்கலங்குதற்குக் காரணமான பகை தெரியாத கொழும்பல்குடி என்க. களும், பலவாய், அவ்வகமனைகளில் வாழும் கொழுமையுடைய குடியும் பல என்பது கருதக் கொழும்பல்குடி. என்றார். குடிகளையுடைய குறும்பல்லூர் நெடுஞ்சோணாடு என்சு. பல்லூர் - குறும் சேய்மையவாகாது அடுத்தடுத்துள்ள பல யெங்கு முடைய நெடிய சோணாட்டின் கண் எ.று. சோணாட்டும் பட்டினம் பெறினும் என வியைக்க. சோழன் நாடு சோடு என் மரீ இயிற்றென்ப. குறும்பல்லூர் நெடுஞ்சோணாடெனர் முரண்வைத்துப் பொருள் சிறப்பித்தல் கண்டு கொள்க. சொல் இத்துணையும் யாறும் அதன் விளைவறாக் கழனியும் பல பயனுந் கருந்துடவைகளும் சூழ்ந்த மனைகளின் மகளிருஞ் சிறுவரும் செல்வத்தினிறைந்து கலங்கு பகையில்லாது வாழும் கொழும்பல் குடிகள் நிறைந்த பல்லூர்களையுடைமையே நாட்டிற்குச் சிறப் பென்பது கருதி வைத்தவாறு காணலாம். கலங்கு பகையறியாது என்பதனால் இந்நாட்டிற்குத் திருமாவளவன் வேலியாய் நின்று காத்தல் குறித்தனர். சோணாட்டுத் தொண்டி முதலிய பட்டினங்க ளுளவேனும் அவற்றுள் எல்லாம் தலை சிறந்து காவிரி கடலொடு கலக்கு மிடத்துள்ளதனால், வாணிகத்துறையான் மேம்பட்டுப் பல் வேன் மன்னரும் பரதவரும் வேறு பல தேயத்துப் பன்மொழி யாளரும் வதியப் பெற்றுச் சம்புத்தீவங்காக்கும் அணங்கே இவ் வூரிற் போந்து த ங்கிய சிறப்பாற் சம்பாபதியென்று சிறப்புப்பெயர்