42 பெற்று, இந்நாட்டையே புகார் நன்னாடு என்று சொல்லும் வண்ணம் (அகம் 181.) புலவர் பாடும் புகழானிறைந்த புகார் நகரம் ஒன்றே பட்டினம் என்னும் பொதுப் பெயரே தனக்குப் பெயராகக்கொண்டு விளங்கிய காலம் அஃதாதலின் அங்ஙனங்கூறினார். ஊரென படுவது உறையூர் என்பது போலப் பட்டினம் எனப்படுவது புகார்ப் பட்டினம் என்றவாறாம். இக்கடற்கரை பூர்க்கியைய நெய்தலையே முதற்கட்கொண்டு அதற்குத் தலையாய உப்பு விளைவைக் குறித்தார். உப்பு என்ற பெயரானே அதன் சுவை அறியப்படுதலின் அதன் தூய்மை வேண்டி வெள்ளையுப்பு என்றார். தமிழில் 'வெண்கலமிழ்தம்' எனப் பெயரிட்டு இதனை வழங்குவர். இதனால் இதன் உயர்வு குறித்தல் காணலாம். உப்பின் கொள்ளை - உப்பு விலையாகக் கொள்ளற்குரிய விலை, "உப்பு விலையாக நெல்லொடு வந்தபஃறி' என்றதனால் அக்காலத்து விலைக்குக் காசு வழங்கலினும் மிக்குப் பண்டங்களே மாறு வழங்குதல் புலனாம். இந் நெல்லொடு வந்த வல்வாயோடங்கள் பந்தியிற் பிணித்த குதிரைகள்போல அணை முதலிற் பிணிக்கப்பட்டு வரிசையிலிருக்குங் கழிசூழ்ந்த தோட்டங் களையுடைய "காவிரிப்படப்பை நன்னாடு" என்ப. திண்காப்பிற் கடிநகர் என்க.- 31-35 அணை முதல்- அணைக்குந்தறி. மதிசேர்ந்த மகவெண்மீன் உருகெழு பொய்கையாகிய இணையேரி என்க.மதி,நீர்வடிவனாதலா னும் மகம் வளைவுடைய வாய்க்காலாதலானும் பொய்கையாகிய ஏரி கட்குவமித்தார். 36-41 திறனுயர் கோட்டம்- வலியானுயர்ந்த தேவாலயம் என்றது எல்லாத் தேவரையுந் தன்கணையான் மோகிப்பிக்குங் காமதேவன் கோட்டம் எ.று. இக் கோட்டமும் இவ்விணையேரியும் காவிரி கடலொடு கலக்குமிடத்துண்மை, சிலப்பதிகாரத்துக் கனாத்திற முரைத்த காதையில்,
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/57
Appearance