" 43 "கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றின் மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள சோமகுண்டஞ் சூரியகுண்டந் துறை மூழ்கிக் காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு தாமின் புறுவ ருலகத்துத் தையலார் என வருதலா னறிந்துகொள்க. திறலுயர் கோட்டத்தை யடுத்து முருகமர் பொய்கையிணையேரி என்க. முருகு அமர் பொய்கை - தெய்வத்தன்மை யமைந்த பொய்கை எ.று. மூழ்கினார் கணவரொடு இன்புறச் செய்தலாற் றெய்வத்தன்மை கூறினார். முருகு தெய்வத்தன்மைக் காதல் "முருகுறழப் பகைத்தலைச் சென்று" என்புழி நச்சினார்க்கினியர் கூறியது கொண்டுணர்க. இந் நிலம் வெள்ளையுப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த பஃறி பிணித்தலான் நெய்தலாயும், கழிசூழ்படப்பைப் பொழிற்புறவால் முல்லையாயும், உயர்கோட்டத்தான் மலையாயும், பூ முரண் கிடக்கை யிணையேரியால் மருதமாயும், நானிலங்குழீ இயதாய தோற்ற முடைமை தெளிய இங்ஙனங் கூறினார் என்க. காமவேள் கோட்டம் குறிஞ்சியாதல் உயர்த்தியாலும், புணர்ச்சியாகிய சேர்க்கையை ஆண்டு நிகழ்த்தலானும் உய்த்துணர்க. இருகாமம் - இருவகைக் காமக் கூட்டம். எ.று. நாமே கூடுங் கூட்டமும், கொடுப்பக்கொண்டு கூடுங் கூட்டமும் அன்க, இரு காமத்தினுந் தலைவன் தலைவிபை யிணைவிக்கும் முருசாமர் எ.று.பொய்கை எரி என்றது மக்களான் ஆக்கப்படாத waken யென்பது குறித்தது. ஏரியைப் புறத்தேயுடைய தின் வெண்கோயில் மாசூட்டும் பூதங்காக்கும் புகலருங்கடிநகர் எனவும் ஷ நகர்க்கட்டுச்சிற் சேக்கும் பட்டினம் பெறினுமெனவுமியைக்க நச்சினார்க்கினியர்க்குக் கோட்டம் கோயில் என்பதும் உடன்பா டென்பது அவர் "உயர் கோட்டத்தை எல்லாரும் மதியைச் செர்ந்த மகமென வெண்ணுதலுமாம்" எனக் கூறுதலானறிக. இப் பொருட்குக் கோட்டத்து என்புழி அத்து 66 மயந்து 'பௌவத்து எனப் பதிற்றுப்பத்துள் வந்துழிப்போல அசை நிலையாகக் கொள்க. அவ்வுரையாளர் இக்கோயிலை யாருடைய
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/58
Appearance