45 அறமுங் கூறியவற்றால் இது தமக்கென்றடப்படும் அடுக்களை யாகாமை யுணர்த்தினார். தமக்கென் றுலை யேற்றார்" என்பது எளியார்க்கே கூறியதாகவும் செல்வர்க்கு வேறு கூறியதாகவும் நினைய வொண்ணாதென்க. யென்பது அட்டில் என்னுஞ் சொல்லானும் மேல், "சோறு வாக்கிய கொழுங் கஞ்சி யாறு போலப் பரந் தொழுகி யேறு பொரச் சேறாகி' சோறடுஞ்சாலையே எனப்பாடுதலானும் அறியலாம்.யாறுபோல என்று மிக அடுதல் கூறியதனால் மிகவுண்ணுதல் குறித்தனர். 'குழுமூராங்கண், உதிய னட்டில் போல வொலியெழுந்து.' (அகம்.168) எனச் சேரன் அட்டில் சிறப்பித்துக் கூறப்படுதலுங்காண்க. கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகல் கூறி அடப்பட்ட அடிசில் அளவைப் பெருக்கிக் காட்டலே நோக்கு; யாறுபோல நிலனிறந்ததன்று. கொழுங்கஞ்சி என்றது அதுவே உண்டால் உடற்குக் கொழுமை செய்யும் என்பதுபற்றி. இக்கருத்தின் றாயிற்றள்ளப்பட்ட தொன்றற்குக் கொழுமை கூறுதல் அவர் பெருமதிக் கேற்காதென்க. நமதிக் கேற்கா 46-50 ஏறு பொரச் சேறாகி என்றது. ஆன் விடைகள் நிலத்தொடு பொருது கோட்டுமண் கொள்ளும் வண்ணம் சேறாகி என்றதாம். "நீறெடுப்பவை, நிலஞ் சாடுபவை" (முல்லைக்கலி.106) என்புழி இவ்வுரையாளரே "முன்பு காலாலே நிலத்தை வெட்டி நீற்றையெழுப்புமவை இப்பொழுது மழை பெய்தமையிற் கோட்டு மண் கொள்ளுமவை" என்றெழுதிய வுரை நோக்கி யுண்மையறிக. நனைந்த நிலத்தை மோந்து பொருது கோட்டு மண் கொள்ளல் செருக்கிய ஆனேற்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/60
Appearance