46 றினியல்பென்க. கஞ்சி யொழுகிப் பொரச்சேறாகித் தேரோடத்து கள் கெழுமி என்க. தேர்கள் மிக்கோடுதலாற்றூளியாய்க் கிளம்பி வேறுபட்ட வினையோவத்து வெண்கோயில் மாசூட்டும் எ.று. வினையொன்றான் நிஜவடி வி வேறுபட்ட வினையோவம் னின்று வேறுபடுத்துணர்த்தப்பட்ட சிந்திரம் என்று சித்திரத் திற்கும் அதன் நிஜவடிவிற்கும் உரு முதலியன வேற்றுமையில்லை யென்றும் வினையே வேற்றுமையென்றுங் குறித்ததாம். இவ் வோவியம் வினையுஞ் செய்யுமாயின் இது நிஜவடிவென்றும் இது சித்திரவடிவென்றும் வேற்றுமை புலப்படாதென்பது கருத்து. இவ்வாசிரியர் இனிதுவைத்த, இவ்வரிய கருத்து உரைகாரராற் றெளியப்படாமலொழிந்தது இரங்கத்தக்கது. நீறாடியகளிற்றை உவமித்தது அம் மாசால் ஊறுபடாமையும் மழையினனைந்தால் எளிதின் மாசு நீங்கி விளங்குதலும் கருதி. பல்லாயிரவர் பசி நீங்க உண்ணுதற்குக் காரணமாயதொன்றான் அழகிற்கமைக்கப்பட்ட சித்திரங்களையுடைய வெண் சுதை மாடக்கோயில் மாசூட்டப் படுதல் கூறியதனால் இவர் தாரகபோஷகங்களையே போக்கியங்களி னும் மிகுத்து உலகிற்குப் பயனாக வுணர்த்தல் கருதியது தெரிய லாம். கோயில் மாசூட்டுந் தண்கேணித்தகை முற்றத்துக் கடிநகர் என்க. தண் கேணியான். நிரைக்குத் தாரகங் கூறினார்.-5:--55 - தகை முற்றம் அவை தங்கற்கேற்ற தகுதியையுடைய முற்றத்துக் குடித்துத் தங்குதற்குரிய முற்றத்துச் சாலை என்க. முற்றத்தையும் பகட்டெருத்தின் பலசாலையையும் உடைய கடிநகர். பகட்டெருது - பெரிய எருதென்பர். பகட்டுப்பலசாலை யெனவும் எருத்தின் பலசாலை எனவும் கொள்ளினுமமையும். பகடும் எருதும் மக்கள் போலக் காப்பது கருதிப் பலருண்ணுமிடத்தையடுத்து வைத்தனர், உழவிற்குங், கடாவிடுதற்கும்,சகடமூர்தற்கும், பொதி சுமத்தற்கும், நிரை பல்குதற்கும் வேண்டினவாதலின் இவை கூறினர். தவப்பள்ளித்தாழ்கா என்பது எயிற்புறத்துத் சாலைகளையடுத்து ஓரறிவுயிர்க்கும் அங்கு ஊறு செய்வாரில்லாமை யாற்றழைத்துத் தரையிற்றாழ்ந்த சோலை எ.று. அக்காவிற்குயில் காயின் என்றார்; அச் சோலையைக் குயில் வெறுத்தற்கு ஓரேது தவச
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/61
Appearance