47 கூறினார், தவப்பள்ளி - முனிவர் அங்கு வேட்டலான் மேற்கூறிய வெல்லாம் வளம்பட நிகழ்வன என்பது தெரியக் கூறினார். தவப் பள்ளித் தாழ்காவின் முனிவர் அங்கி வேட்கும் புகை யென்றியை தலான் அடுக்களைப் புகையை விலக்கற்கு ஆவுதி நறும் புகை என்றார். தேவர்க்கு விருப்பஞ் செய்தலான் நறும் புகை என்க. இப்புகை மிகுதியால் ஆண்டுள்ள குயிற்கு அவ்வுழி வெறுக்கப்பட்டது. 56-60 அதை வெறுத்துக் குயில்கள் தம் பெடையொடு கடிநகர்தி தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் பட்டினம் என்க, துச்சில் - ஒதுக்கிடம். புறவொடு குயில் பெடையொடு சேக்கும் என்றதனாற் புள்ளினும் பகையின்மை குறித்தனர். முனிவரோடு ஒரு காவின் வதிந்தகுயில் புறவொடு ஒரு துச்சிற் செக்கும் என்ற தனார் புறவுஞ் சாந்தவியல்புடையன என்று நினைந்தனர் போலும். முனிவரை ஒத்த தியாகம் புறவிடைக் கேட்டலுமுண்மை சீராமாயணத்திற் கண்டது. பசித்தடைந்த வேடனுக்குத் தன்னைத் தழலிற் சுட்டளித்த புறவின் கதையானுணர்க. "பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்கவந் தடைந்த பேதை வேடனுக் குதவி செய்வான் விறகிடை வெந்தீ மூட்டிப் பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் படுத்த பைம்புள் * வீடுபெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ" (கம்பரா. வீடணன். 112) என்றார் கம்பநாடர், இரியல் போகி. -குடியோடிப் போகிக் கடிநகர்ச் சேக்கு மென்க. "மாடத் திறையுறை புறவின் செங்காற் சேவல் இன்றுயி விரியும் பொன்றுஞ்சு வியனகர் எனப் பெரும் பாணாற்றில் (438-440) இவ்வாசிரியரே கூறுதலான் இந்நகர் காளிகோயிலாகாமை யுணர்க. "மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடக்கு 'தன்னுயிர் கொடுத்த பைம்புள் என்னும் பாடம்.*
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/62
Appearance