48 என அகப்பாட்டில் இவரே கூறுதல் காண்க. (அகம்.167) தூதுணும் புறவு-கல்லுண்ணும் அழகிய புறா, ஒவ்வொரு நன்மையானும் ஒரோர் தீங்கு விளைதலாக இவ்வாசிரியர் கூறி அந்நன்மைகளின் இன்றியமையாமையைக் காட்டுதல் கடிநகர்ச் சேக்கும் பட்டின மென்க. காண்க. பூதங்காக்கும் புகலருங்கடிநகர் - பூதங்காத்தலால் தீங்கு நினைப் எ. று. நகர் பாரும் புகற்கரிய காவலையுடைய புகார் நகரம். என்றது "புகார் நகரம்' எ.று. (சிலப். வாழ்த்து) என்னும் வழக்குப்பற்றி. குயில் பெடையொடு நகர்த்துச்சிற் சேக்கும் என்றதனால் பிறர்க்கு அடைக்கலம் புகற்கெளிமையும் பூதங்காத்த லாற் பகைத்த நெஞ்சினர் புகற்கருமையுங் குறித்தார். இந்நகரம் இந்திரன் ஏவலான் ஓர் பூதத்தாற் காக்கப்பட்ட செய்தி, "தேவர் கோமா னேவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை " எனவும், "கோநகர் காத்த மாபெரும் பூதம் (இந்திர விழவு. 66-67) இருந்துபலி யுண்ணு மிடனுங் காண்கும்" (க்ஷை கடலாடு. 8-11) காளி எனவும் வருவன கொண்டு தெரிக. உரைகாரர், கடிநகர் காவலையுடைய கோயில் என்று கொண்டு இதனைக் காளிக்கோட்டம் என்றார். அவர் பூதங்காக்குமென்ற அடையான் அது கோயிலாமென்று நினைந்தனர். புலிப்பொறிப் போர்க்கதவிற்றிண் காப்பிள், வெண்கோயின் மாசூட்டும் பூதங்காக்கும் புகலருங் கடிநகர் என்றியைதலான் ஆசிரியர் கருத்து அஃதன்மை எளிதின் அறியலாம். "உதியனட்டில் போல வொலி யெழுந்தன்று (அகம்.169) என்பதனாற் சேரன் அட்டில் போல இவ் வெண்கோயிலட்டில் புகழப்படுதலான் இவ்வுண்மை யறியலாம்.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/63
Appearance