உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 இவ்வூா கடற்கரை யடுத்து நெடிதிலிருந்து ஒருபுறம் பட்டினப் பாக்கம் எனவும் ஒரு பக்கம் மருவூர்ப்பாக்கம் எனவும் இரு பிரிவாக வழங்கப்பட்டதெனச் சிலப்பதிகாரத் திந்திரவிழாவால் அறியப் படுவது. இவ்வுருத்திரங் கண்ணனார் அவ்வாறே இவ்வூரைப் பகுத்துக் கொண்டு கூறாதொழியினும், இளங்கோவடிகள் ஆண்டு வகுத்தோதியன பலவற்றுட் சில இந்நூற்குமொத்தலான், இந்து இன்ன பாக்கத்ததென்று கருதிக்கொள்ளுதற் கிடனுண்டு. அரசன் கோயிலுள்ள பிரிவு, அடிகள் கருத்துப்படிப் பட்டினப்பாக்கத்ததாத லின் இவ்வாசிரியர் கோயில் கூறிய இடமும் அப்பாக்கத்ததென்றே துணியலாம். அடிகள் பட்டினப்பாக்கத்திற்கும் மருவூர்ப்பாக்கத் திற்கும் இடையே ஒரு பெரிய மரச்சோலையுள்ள தென்றும் அதன் கண் நாளங்காடி நிகழுமென்றுங் கூறுவர். இதனை, "இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியி னிடைநில மாகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலை" (இந்திர விழவு. 59-61) உள்ள எனக் கூறுதலானறிக. இவ்விருபகுதிக்கு மிடை நிலத்திலே இவ்வுருத்திரங் கண்ணனார் முதுமரத்த முரண்களரி" தென்று கொள்வர். இது 'முனையிடம்' என்றதற்குப் பெரிதும் ஒத்தல் காண்க. இவ்விடை நிலத்தினிரண்டு புறத்தும் பட்டினத்து எயில் வாயலிற் பூதமுள்ள தென்றும், அப்பூதத்தின் பலி பீடிகை அதன் முன்னுள்ள தென்றும், அதன் முற்றம் முதுமரத்த முரண் களரியாமென்றும், அங்கே பல மறவரும் வீரச்செயல் புரிவரென் அம் கருதிக்கொள்க. இதுவே அடிகட்குக் கருத்தாதல், "இருபாற் பகுதியி னிடைநில மாகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலை கடுக்கின்றி நிலைஇய நாளங் காடியிற் தேவர் கோமா னேவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை