உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 மருவூர் வீரர் சூடியது குறித்தது. வறண்ட அடும்பின் மலாச் கண்ணியைச் சூடியும் எ.று. 66-70. புனலாம்பற் பூச்சூடியும் - நன்னீரிலுண்டாகிய ஆம்பற்பூக் கண்ணியைச் சூடியும். எ று. இவர் இங்கனம் பூவானும் உணவானும் இரு வகைப்படுத்தவரையே அடிகள் மருவூர் வீரரும், பட்டின மறவரும் என வகுத்தனர் என்றுணர்க. "நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும் நாண்மீன் விராஅய கோண்மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ" " என்றது, கடலும் அதனையடுத்துப் பன்மலர் மலைந்து திரியும் பலருஞ் சிலருமாகிய இவ்வீரர், மலர்தலை விறன் மன்றத்து வென்றி தோல்விகள் காண ஈண்டினர் பலருடன் தொக்கு. எ.று. நாண் மீன் மலர்க்கும், கோண் மீன் அவரினும் வலியர் எளியராகிய சிலர்க்கும் உவமையாம். களரி. மலர்தலை மன்றம் அவரவர் தலைமை மலர்தற்குரிய முரண் ஆடாடென்ப வொரு சாரோரே யாடன்றென்ப வொரு சாரோரே" என்னும் புறப்பாட்டிற் போலத் தமக்குவப்பார்பாலே வென்றி கூறினாராகாமல், உண்மையாய் அவரவர் தலைமை தோற்றஞ் செய்யும் பூதபீடிகை முற்றத்துள்ள முரண்களரி யாதலின் இங்ஙனங் கூறி னார். பரந்த இடம் என்றும், வீரரும் வீரங்காண்பாரும் தங்கு தற்குப் பரந்தகன்ற நிலனென்றலும் ஒன்று, நாண் மீனிற்பரணியுங் கோண் மீனிற் செவ்வாயும்போல் வீர முடைமை கூறுதலான் ஈண்டு அவ்விரண்டுமே குறித்தாரெனிலுமமையும். இவற்றிற்கு அவ்வீரக்கிழமை தள்ளப்படாத இயல்பாயினாற்போல விறற் கிழமையுடையார் என்பது கருத்தாகக் கொள்க. இவ்வகையான அரிய பெரிய வுரிமையையே "கோளுடைக்கிழமை யெனச் சிந்தாமணியுட் கூறினார். அதனானுணர்க. ஈண்டுப்போல என்றது