52 தாராகணப் போரைக் குறிப்பதெனினுமமையும். தாராகணப் போர் என்பது கிரகயுத்தம். நச்சினார்க்கினியர் "கோள்களினுரிமை யோடொ ாத்தவுரிமை" என்று உரை கூறியதனையுங் காண்க. கையினும் என்றது மருவூர் மறங்கொள் வீரரை நினைந்து; கலத் தினும் என்றது பட்டின மருங்கிற் படைகெழுமாக்களை நினைந்து. கைக்குக் கையுங் கலத்திற்குக் கலமும் உடம்பிலழுந்தத் தீண்டி யெனினு மமையும். "இருஞ்செருவிற் புறக்கொடாது பெருஞ்சினத்தா விகன்மொய்ம்பினோர்" என்க. வா புறக்கொடை வேண்டி நெருக்கலாற் பெருஞ் சின முண்டாதல் காட்டினார். கல்லெறியுங் கவண்வெர் இப் புள்ளிரியும் புகர்ப்போந்தை என்க. ஈண்டு இவர் கல்லெறியுங் கவண்கூறிய வாறே அடிகளுங் கல்லுமிழ்கவணினர் என்று கூறியுள்ளார். பனையில் ஓர் குறிவைத்துக் கல்லெறிந்து தம் வீறு காட்டுவாராவர். போந்தை-பனை. அதன்கட் புகர்புகுதல் கூறியதனால் இவ் வுண்மையுணர்க. புள்ளையெறிதலில்லை என்க. இவர் போந்தையிற் குறிவைத்து அது புகர்பட வெறிதலால் அதன்கண்ணும் பிறமரங் களிலுமுள்ள புட்கள் அஞ்சியிரிதல் இயல்பென்க. கவண்வெரீஇ யென்றதுங்காண்க. கவண்வெரீஇ மேலேயுள்ள புள்ளுடனிரியும் பன்றியுங் கோழியுமுடைய புறச்சேரி என்க. பறழ்ப்பன்றி - குட்டிகளையுடைய இளம் பன்றி. உறைக் 76-80. அடுத்தூரும் நன்னீருடைமையால் உறைக்கிற கூறினார். ஈண்டுப் புறச்சேரி முதலாக வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு இறுதியாக மருவூர்ப்பாக்கமே இவர் கூறுகின்றார். கிணறு கூறியதனால் இப்புறச்சேரியுள்ள மருவூர்ப்பாக்கத்து ஏம் களின்மை குறித்தார். மேழகத்தகர்-ஆட்டுக்கிடாய். மேழகம் இரண்டற்குமுள்ள ஒற்றுமை கண்டு ஏழகம் பாடமன்றென்க. பாகதச்சிதைவான பாலி மொழியில் "ஏழகம்" என்பதும் உண்டு. மஷம் என்பது
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/67
Appearance