62 இனி வலியுடை வல் அணங்கின் நோன்புலி யென் றியைப்பர் உரையாளர். அவர் கருத்துப்படி பொறித்த அச்சுப்புலிக்கு அடையாகும் அவை. அருங்கடிப் பெருங்காப்பின்கண் வலி யுடைய வல்வருத்தமுள்ளவன் என்பது பொருந்தும். காப்பிற் கேற்ற வலியுடைமையும் அதனை அசைவின்றிப் புரிதலான் வல் வருத்த முடைமையும் வேண்டினர். வல்லலங்கினான் என்பது செய்யுளாதலின் வல்லணங்கினோன் என வந்தது. இவன் புலி பொறித்தவனாகக் கொள்க. அளவறியாவரம்பறியாப் பலபண்டங் கட்குப்புலி பொறித்தலானும் பல் வருத்த முடைமை கூறலாம் என்க. பல் என்றும், புலிபொறித்துப் புறம்போக்கி- இடந்தடுமாறுதலாற் பண்டங்களைக் காப்பின் புறம்போக்கி வை வத்தனர் அங்ஙனம் புறம்போக்கிய பண்டங்கட்கு நல்லிறைவன் புலி பொறித்ததே காவலாக அமையுமென்றுங் குறித்தனர். 136-140.இம்மூடைகளே வெளியிற் கிடத்தல் இப்பண்ட மலையில் ஞமலியுந் தகரும் ஏறி விளையாடுதல் கூறுதலானறிக. புலிப் பொறியாதலால் ஞமலியுந்தகரும் அஞ்சாவாயின. மதிநிறைந்த- மதித்தல் நிறைந்த; இறக்குமதி ஏற்றுமதிக்கு நிறைந்த எனினு மமையும். மதி உடன்பாடென்று கொண்டு இறக்கவும் ஏற்றவுங் கூடாதென்று தள்ளிய பண்டங்களை விலக்குவதெனினும் இனித தமை யும். அரசர் சுங்கத்தலத்தில் உடன்படுதலான் அவை பண்டமாக மளிதல் கருதி மலி பண்டமென்றார். மூடைப்போர்-மூடையடுக்கிய குவியல். மால்வரைக்கவான் - கரிய மலைப் பக்கம். வரையாடு வருடை- வரைகளில் விளையாடும் ஓர்வகை மான். தனை, "இருடூங் கிறுவரை யூர்பிழி பாடும் வருடை மான் குழவிய" வழைவளர் சாரல் வருடை நன்மான்" (குறிஞ்சிக்.7) (g. 14) என் என்ற வரிகளான் அறிக. இஃது எண்காலதென்பர்.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/77
Appearance