64 மதலைக்குக் கிளி மழலையும், சாயற்கு மென்மையும் வேண்டுதல் காண்க. அல்குற் றூசுடைத்துகிர்மேனி என்பதனால் அல்குலைப் பாசிழை மேகலையாலணிந்து அதன்மேற் றுகிலையிட்டு மறைப்பது பண்டை வழக்கென்பது தெரியலாம். இவ்வாசிரியரே பெரும் பாணாற்றில், கொன்றை மென்சினை பனிதவழ் பவைபோல் பைங்கா ழல்குல் நுண்டுகி னுடங்க" என்று கூறுதலானுனர்க. "மட்டொளித் துண்ணு மாந்தர் மாண்புபோன் மறைந்துவண்ணப் பட்டொளித் தொழிய வல்குற் பசுங்கதிர்க் கலாபந்தோன்ற' (இலக்கணை.156) எனச் சிந்தாமணியின் வருதலானும் இவ்வழக்கம் உணரலாம். 151-155. வளிநுழையும் வாய்-காலதர். சாளரமென்ப. இதனால் மென்சா பலோர், காற்றின் பயன்றுய்க்கச் சாளர வாயிலில் இருத்தல் கூறினார். பிறரை நோக்குதற்கில்லையென்பது குறிப்பு. வெறியாடு மகளிரோடு செவ்வேளை முன்கையாற் கூப்புதலான் அக்கடவுட்கியைய வரைக் காந்தளந்துடுப்பிற் கவிகுலையை உவமை யாக்கினார். காந்தள்-முருகக்கடவுட்கடையாளப்பூ.செவ்வேளை முன்கை கூப்புதலாலிவர் கன்னியராதல் தெள்ளிது. காந்தள் துடுப்பீனுதல் பல்லிடத்துங் கூறுதலாற் காந்தட்பூத் துடுப்புப் போறல் அறியலாம். "பலதுடுப்பெடுத்த அலங்குகுலைக் காந்தள் (அகம்.108). காந்தளாகிய துடுப்பு என்பதனால் இஃது அடுத்து வரலுவமமாகாமை நினைந்தனர். பிரிவறியாப் பருவத்தாராதலின் செறிதொடி கூறினார். முன்கை கூப்பி வெறியாடு மகளிரொடு- வள்ளிக் கூத்தாடும் மகளில் ராடு நெருங்க இடைத்தாவிச் சென்று 156 - 163. இனி அவ்வாச்சியங்கட் கேற்ற ஒலித்தல் வினையாற் கூறுகற் காண்க. குடலும் பாழுமென்னும் இரண்டிசைக்கருளிக்கும் இரண்டு தோற்கருவி வேண்டி முழவும் முரசுங்கூறினர் போலும். குழலுக்கு முரசும் யாழிற்கு முழவுங் கருதினர் போலும். இயம்பா நிற்க விழவறா ஆவணம் என்ச. விழவறாமைக் கேற்ப இடனகலம்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/79
Appearance