. 65 வேண்டி வியலாவணம் என்றார். ஆவணத்துப்பலர் தொழுகொடி யும் என்க. செவ்வேள் வெறியாடுதலால் விழவறா ஆவணத்துத் தெய்வஞ் சேர்த்திய கொடி என்றவிடத்து இத்தெய்வம் செவ் வேளே ஆம் என நினைத்தல் தகுவது. வாணிகத் தொழில் நிகழும் ஆவணத்தில் இக்கடவுளை வைத்தல், செட்டி என்று வழங்குதல் கருகியே என ஊகித்தலாகும். இக்காலத்தும் புகார் வணிகர் வழியினரென்று சொல்லப்படும் நகரத்தாராகிய வணிககுல மக்கள் தாம் வாணிகத் தொழில்புரியும் ஊசெல்லாம் இத்தெய்வவழி பாட்டை மிகுத்துப் புரிதலும் ஈண்டைக்கு நினைக்க. மையறு சிறப்பு குற்றமற்றதலைமை. ஈண்டுப்பலர் தொழுகொடி யென்றது வ எ ன் ஐயுத கொண்டு உரையாளர் தெய்வம் பல தெய்வங்களாகக் கருதினர். இவ்வாசிரியர் தெய்வக் கொடியென்றே கூறி மக்கட்குரிய கொடி பலவுங் கூறுதலான் அஃதாசிரியர் கருத்தாமோ வேண்டியுள்ளது. பலர் தொழுகொடி என்பது பலருஞ் தொழுகத் சூரிய ஒரு கொடியெனப் பொருள் செய்தலே சிறந்தது. தெய்வஞ் சேர்த்திய வாயிற்கொடி யாதலால் பலர் தொழுதல் கூறினார் என்க. நெய்தல் நிலத்தும் வெறியயர்தல் கூறுவது, "நனைமுதிர் புங்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்" (53) என்னும் குறுந்தொகையானுணர்க. கொடி நிலையும் கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருதல், தொல்காப்பியத்திற் "கொடிநிலை என்புழிக்காண்க. இனி, "மையறு சிறப்பிற்றெய்வம்' 911 மறியறுத்தற்குரிய நெடு சிறப்பினையுடைய தெய்வமுருகன் என்பதும் ஒன்று. வேளணங்குறு மகளிராடுங்களம்" என்னும் மலைபடுகடாத்தில் "முருகனால் வருத்தமுற்ற மகளிர்க்கு மறியறுத்தாடுங் களத்தில் என நச்சினார்க்கினியர் உரைத்ததான றிக. "சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ யூரூர் கொண்ட சீர்கெழு விழவினும்"
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/80
Appearance