75 செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை யறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த தீயொடு விளங்கு நாடன் வாய்வாள், வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன் (புறம்.397) என இப்பாட்டுடைத் தலைவன் பாடப்படுதல் காண்க. அவர்க் குப் பண்ணியம் அட்டியும், பசும்பதம் கொடுத்தும் - அவர்க்கு வேண்டிய பண்டங்களை நீர்வார்த்து நல்கியும் ஆமமான உண்டிகளைக் கொடுத்தும். பசும்பதம் - அடாத பச்சையுணவு. எ-று. வடமொழி யைத் தமிழிற் பெயர்த்துக் கொண்டது. அட்டியும் கொடுத்தும் நான்மறையோர் புகழ்பரப்பியும் எ-று. புறப்பாட்டில் (362) "கைபெய்த நீர் கடற்பரப்ப வாமிருந்த அடைநல்கிச் சோறு கொடுத்தும் என வருதலானறிக. பணவிலைக்குக் கொள்வன பண்யம் என்று கொண்டு அதுவே பண்ணிய மென்னினு மமையும். பண்ணியம் - பண்டம்; " மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும் (பதிற்.59) எனவருவதறிக. கொடுத்துப் புண்ணிய முட்டா நன்னெஞ்சினோர் என்க. இங்ஙனஞ் செய்தலான் அறத்தின் முட்டுப்படாதார்" என்பது கருத்து. " தண்ணிழல் வாழ்க்கை யுழவர் என்றியைக்க. இவ்வாறு கூறியது " அலகுடை நீழலவர்' ஆதல்பற்றி. அலகு - விளைகதிர். (குறள்.1034) விளைகதிருடைய நீழல் என் பதுபற்றித் தண்ணிழல் என்றார். வேந்தர்குடை வெம்மையுஞ் செய்யுமாகலின் தண்ணிழல் வாழ்க்கை என்றார். "மண்குளிரச் செய்யு மறவேனெடுந்தகை, தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல் (சிலப். ஊர்சூழ்வரி)
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/90
Appearance