82 'நுண்ணிதினுணர்ந்தோர்" (எழுத்து. 7) என்பர் தொல்காப்பிய னார். நுட்பம் தெய்வம் தந்த இயற்கையறிவு. இதனை மதிநுட்பம் (குறள். 636) என்புழிக்கண்டு கொள்க. மதிநுட்பத்தொடு பல வாயிலானு மாராய்ந்துணர்ந்து எ-று. நண்ணார் செறிவுடைத் திண்காப்பு என்றதனால் இவன், 174 ஆம் புறப்பாட்டில் உரைகாரர் "அரசிழந் திருந்த அல்லற் காலை என்னும் அடிக்கு, பகை வேந்தரோடு பொருது உடைந்து போதலாற்றம் வேந்தனை ........ யையுடைய பொழுதின் கண்" இன்னாமை என விளக்கியுரைத்தது நன்கு பொருந்துவது கண்டு கொள்க. நண்ணார் - பகையரசர். செறிவுடைத் திண்காப்பு. செறிவுடைக் காப்பு - திண்காப்பு என்க. இயற்கையா யமைந்த வனச்செறிவும் அகலாத படைத்திட்பமும் உடைய காவலை எ-று. ஏறி என்பது தன்வலியால் ஏறுதலைக் குறித்தது. வாள்கழித்து தன் யுறையினின்றுங் கழித்துக் கொண்டு. தனக்குக் காவலாக நின்ற வாட்படையைப் போக்கி என்றுரைப்பர் உரைகாரர். அதுவும் பொருந்தும். அக்காவற் படைகழித்தற்கும் இவன் வாள் உறையி னின்றுங் கழித்தல் வேண்டுமென்றுணர்க. ஈண்டுத்தான் சோழிய வேனாதி திருக்கிள்ளி (திருக்கண்ணன் என்றும் பாடம்) (புறம் 171) யினுதவி வேண்டிற்றென்று துணியலாம். உரு கெழு தாயம் அந்நண்ணார்க்கு அச்சம் கெழீஇய அரசவுரிமை. ஊழின் எய்தி - தனக்குரிய முறைமையானெய்தி. இதனால் இவன் சேட்சென்னி நலங்கிள்ளிக்குப் பின்னே அரசெய்தற்குரிய அவன் மகனே யென்று ஊகிக்கப்படுகின்றான். புறப்பாட்டிற் பல்லிடத்தும் அவனை யடுத்தே இவன் பாடல் கோக்கப்பட்டுள்ளன. இளஞ்சேட்சென்னி புதல்வ னாகிய கரிகாலன் இவனுக்கு மூத்தவனென்றே கருதுகின்றேன். சோழர் குடியுள் உட்பகையுற்ற நெடுங்கிள்ளி என்பான் நலங்கிள்ளி யுடனும், அவன் மகன், அவன் தம்பி மகன் கரிகாலன் இவரெல்லா ருடனும் பகைமை பூண்டவனாகிப் பாண்டியர் சேரர் இந்நாட்டுப் படையெடுத்தற்கு வேண்டியன செய்து மிக உதவினானாவன்.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/97
Appearance