உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அவன் அப்படையெடுப்பையே கரிகாலன் தொலைத்தவனாவன். இதற்கிடை யில் நலங்கிள்ளி மகனென்று நினைக்கப்படும் கிள்ளிவளவனாகிய நெடுமாவளவனை முள்ளூர் மலைக்காட்டிற் சிறைப்படுத்தியிருத்தல் கூடும். முள்ளூர் மலைக்காட்டில் இச்சிறையிருப்புக் கேட்கப்படுத லான் (புறம்.174). அவ்வமயம் சோழனுக்குப் பகைவனாகிய சேரற்குத் துப்பாயிருந்த மலையமான் திருமுடிக்காரி இச்சோழர் உட்கலகத்திற் சோழன் நலங்கிள்ளிக்கு விரோதமாகி மகனெனக் கருதத்தக்க கிள்ளிவளவனை யகப்படுத்திச் சிறை செய்தனனாவன். இதனால் இக்கிள்ளிவளவன் இச்சிறையினின்று மீண்டவுடன் மலையமான் மக்களை யானைக்கிடப் புக்கானாவன். இம் மலையனுக்குத் தாயாதனாகிய மலையமான் என்பானொருவன், இச் சோழனை அச்சிறையினின்றும் விடுவிக்கத் துணைபுரிந்தனனாவன் எனக்கொள்க. மலையமான்காரி அப்போ தப்போது மூவேந்தர்க்குந் துப்பாதல் நூல்களில் காண்க. " மூவரு ளொருவன் துப்பா கியரென வேத்தினர் தரூஉங் கூழே' எனக் கூழுடையனாக அவன் பாடப் படுதலானறிக. (புறம். 122) என வருத "காரி, சேரலற் கீத்த கொல்லி '" (அகம் 209). லானு மறிக. இவ்வளவற்குத் துணையாய மலையமான் புலிபொறித்த கோட்டை யுடையனாகப் பாடப் படுதலானும் அறிக. இக்கிள்ளி வளவன் காரிவழியிலொருவனாற் சிறைப்படுத்தப்பட்டானெனவும் அவ்வழியில் பிறனொருவனால் விடுவிக்கப்பட்டனனெனவுங் கொள் வதே பொருந்தும். சிறை நீங்கியபோது சிறைவைத்தவன் மக்களைப் பற்றி யானைக்கிடப் புக்கனன் என்க. இங்ஙனங் கொள்ளாது இக் கிள்ளிவளவன் தான் பிணியிருத்தற்கு முன்னே மலையமான்றன் பகைஞர்க்குத் துப்பாயது கருதி, அவன் மக்களைப்பற்றி யானைக் கிடப்புக்கனன் என்க. இங்ஙனமன்றி இக் கிள்ளிவளவன் தான் பிணியிருத்தற்கு முன்னே மலையமான்றன் பகைஞர்க்குத் துப்பாயது கருதி அவன் மக்களைப்பற்றி யானைக்கிடப் புக்கனன் என்று கூறினு மிழுக்காது. யானைக்கிடப் புக்கதனால் முள்ளூரி