பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


v நீக்கிவிட்டு மற்றவற்றை இந்த நூலில் வெளியிட்டிருக்கி றேன். புதிதாக நான் எழுதிய பல துணுக்குகளும் இதில் சேர்ந்துள்ளன. பொங்கல் பரிசிலுள்ள சிறு துணுக்குப் பகுதிக்கு 'பட்டிப் பறவைகள்’ என்று நான் அன்று தலைப்பிட்டிருக் தேன். அதே தலைப்பை இந்நூலுக்குக் கொடுத்திருக்கி றேன். ஆடு மாடுகளே அடைத்துவைக்கும் பட்டியைவிட்டு நீங்கித் தனியாகச் சுற்றித் திரியும் மாட்டைப் பட்டி மாடு” என்று கூறுவார்கள். பட்டியிலே அடைக்கும் மாட்டுக்கும் அதே பெயர் உண்டு. காவலில்லாதவன்’ என்ற பொருளில் பட்டி என்ற சொல் வழங்கும். 'கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி, கோதக்க செய்யும் சிறு பட்டி’ என்று வந்திருப்பதைக் காண்க (கலித் தொகை குறிஞ்சிக்கலி 15) "பட்டி போன்று வேண்டிய வாறே ஒழுகலின் பட்டி யென்ருர்’ என்று பரிமேலழகரும் திருக்குறள் உரையில் கூறுகிருர் (குறள் 1074).

  • பட்டிப் பறவைகள்' என்ற பெயர் என் நண்பனுக்குப் பெரிதும் பிடித்திருக்கிறது. மேலே குறிப்பிட்ட ரவீந்திரகாத தாகடரின் நூலுக்குத் தமிழ்ப்பெயராகக் கொடுக்கவும் இந்தத் தலைப்புப் பொருத்தமாக இருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது.

தாகரின் நூலிலிருந்து மொழிபெயர்த்த 50 துணுக்கு கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை இந்நூலில் வெளியிட மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிட்டெடும், ரவீந்திரநாததாகடர் டிரஸ்டும் அன்புடன் அனுமதி தந்தன. அவைகளுக்கு என் மனமார்ந்த நன்றி உரியது. இந்நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். முதற் பகுதியில் தாகடரின் நூலிலிருந்து மொழி பெயர்த்த