பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 85

இது கதையே என்றாலும் அதிலும் கந்தபுராணக் கற்பனையே என்றாலும் வெளிப்படும் பட்டிமண்டப அவைக் களம், அவையோர், நடுவர், வாதமிடுவோர், வாதக்கருத்தை வைத்தல், அறைகூவல், ஏற்றல், கடவுளரே வாதமிடல், இடைக்காலத் தீர்ப்பு, ஒரு கருத்து ஒதுங்கல், வாதத்தில் பிடிவாதம், நடுவர் செயலால் ஒறுத்துத் தீர்ப்பளித்தல், ஒறுப்பு காலங்காலமாய் நிலைத்தல் என்பன சமயப் பட்டி மண்டபப் பங்கைக் காண முடிகிறது.

இது மும்முனைப் பட்டி மண்டபம்,

பெண் கடவுளர் பங்கு

வாத உலகில் ஆண்பாற் கடவுளர் பங்குக்குப் பெண்பாற்கடவுளர் பங்கு இளைத்ததா என்ன? அஃதும் கிடைக்கிறது . திரு - வாணி வாது என்றொரு நூல். ஆசிரியர் பெயர் கிடைக்கவில்லை.

திரு - திருமகளும், வாணி - கலைமகளும் வாதம் புரிந்ததாகக் கூறும் நூல் முழு வாதச் சிறுநூல் கல்வி சிறந்ததா? செல்வம் சிறந்ததா? என்பது வாதப் பொருள்.

இந்நூலின் பாட்டுடைத் தலைவர் உண்மையில் வாழ்ந்த கங்காதர செழியன்.

இத்தலைவன் ஒரு மண்டபம் எழுப்பி அதில் பொன் பரப்பிசரையும், பெரியநாயகி அம்மையையும் எழுந்தருளச்