பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 89

கோட்பாட்டு அறிவிப்பாகவும், மறுப்பாகவும் நிகழ்ச்சியைக் கொண்ட சிறுவாத நூல் இஃது உண்மை : நிகழ்ச்சி அன்று என்றாலும் வாதக்கோட்பாடுகொண்டது.

அங்கிருந்த சைவ அருளாளர், அவையோர், அன்னோர் சைவ சித்தாந்தி ஒன்பது பேருக்குச் சொன்ன அமைதியைப் பாராட்டி,

-9iகி து நீங்கள் சங்கற்பம் நிராகரித்தமை”

என்று முடிவை தீர்ப்பை வழிமொழிந்தனர்.

தொடக்க உரையாக உமாபதி தேவர்

“அருள்சேர் மாந்தர் (அவையினர்) வெருள செய்யாமல் தற்கமும், விடையமும் கற்க நற்கவி மாந்தர் நக மகிழ நவிற்றுவனே 76 என்றார்.

இவ்வகையில் சில நூல்களும் பல நூல்களில் தனி விளக்கங்களும் உள்ளன.

இவ்வாறு ஒரே சமயத்து உள்வாதம் ஒரு சமயப் பங்காகியது. (9) தனியார் வாதப் பங்கு .

சமயத் தொடர்பிலும், தனியார் தம் உணர்ச்சி வயப்பட்ட தொடர்பிலும்,புலமைத் திறத்திலும், சிறு சிறு