பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிமண்டபத்தொடர்பில் மட்டும்.இதனை ஆசிரிய முன்னுரையின் முதலுரையாக எழுதவில்லை. முனைவர் ந சஞ்சீவி அவர்கள் தமிழில் ஆய்விற்கு இலக்கணம் வகுத்தவர். பல்கலைக்கழகப் பேராசிரியர். அத்தகு பெருந் தகை ஒர் எளிய தமிழாசிரியனைப் பாராட்டிவேண்டுகோள் படைத்தார். அப்பெருந்தகவைக் குறிப்பதே என் நோக்கம்.

ஆய்வு வளாகத்தில் அவர் தாயுள்ளம் கொண்டவர் . இக்

காலத்தே சின்னதோர் கடுகு போல் உள்ளங் கொண் டோரை"க் காணும்போது இப்பாராட்டுரை பொன்னுரை யாக மிளிர்கின்றது. இச்செய்தியை இந்நூலின் முன்னுரை யில் குறிக்காது விட்டால் என் உள்ளத்தின் ஒரு மூலை ஊடல் கொள்ளும்.

பேராசிரியரின் வேண்டுகோள் என் அறிவை உந்த இரண்டு கட்டுரைகளைத் தமிழரசு’ இதழில் எழுதினேன் . என்னைச் சூழ்ந்துகொண்ட பணிகளும், நான் சூழ வைத்துக்கொண்ட பொதுப்பணிகளும் ஒர் ஆய்வு நூலாக வடிக்க வழிவிடவில்லை முனைவர் ந. சஞ்சீவி அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒர் ஆய்வு அறக் கட்டளையை நிறுவினார். மூன்று தொடர் பொழிவுகளாக ஆய்வுரை அமைய விதித்தார். இவ்வறக்கட்டளையில் ஆய்வுரையாற்ற வேண்டப்பட்டேன்; இசைந்தேன் முனைவர் பெருமகனாரின் நினைவுப் போற்றிக்கு இதனை ஒரு வாய்ப்பாகக் கருதிப் பட்டி மண்டப வரலாறு” என்னும் பொருளை அறிவித்தேன்.

xii