பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வப்போது பொதிய வைத்திருந்த கருத்துக்களை மறு ஆய்வு செய்து பிற வேலைகளைப் புறந்தள்ளி மிகு உழைப்பில் ஆய்வுரையை ஒரு நூலாகும் வகையில் எழுத் துருவாக்கினேன். அறக்கட்டளை நிகழ்ச்சி தள்ளிக் கொண்டே போனதால் உலகத் தமிழ் மாநாட்டின் போது இது பதிப்பாகி வெளிவர வேண்டுமென்று விரும்பினேன். பல்கலைக்கழகப் பொழிவிற்குச் சிலப்பதிகார ஆய்வுப் பொருளை அறிவித்து இதனைப் பதிப்பாக்கக் கருதினேன்; விரும்பினேன். என் விருப்பத்தை நியூ செஞ்சுரி புக் அவுசினர் நிறைவேற்றியுள்ளனர். உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பு வெளியீடாகவே மலர்த்துகின்றனர். பதிப்பு வளாகத்தில் நியூ செஞ்சுரி நிறுவனம் நிலைத்த முழு நிலவு: களங்கமற்ற முழு நிலவு உரிய, அரிய நூல்களைப் பதிக்கும் பாங்குள்ளது. இதன் பதிப்பாக வெளிவருவது என் விருப்பத்தை மகிழ்ச்சியாக்கியுள்ளது. நிறுவனத்தாரை என் நெஞ்சில் அமரவைத்துப் பாராட்டி நன்றி கூறு கின்றேன், வாழ்த்துகின்றேன்.

பட்டி மண்டப வரலாறு ஒரு மாலை அணிவிக்கப் பெற வேண்டுமென்றால், அணிவிக்கும் கைகளுக்கு உரிய பொருத்தம் வேண்டும் அக்கைகள் திருக்கைகளானால் மேலும் ஒரு தகுதி அத்திருக்கையினர் பட்டி மண்டபத் திற்குரிய அறிவுப் பாங்கும், பட்டறிவுப் பங்கும் பெற்றவ ராயின் நூல் தனிப்பொலிவு பெறும் பட்டி மண்டபத்தின்

xiii