பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 1 t 7

o - - . “6 . + “வாய்விடுஉம் தானென்ப” என்றதற்கு

“இனிய பல வார்த்தைகளையும் கூறாநிற்கும்” என்று பொருள் எழுதப்பட்டது . இக்கலித்தொகையில் மருதன் இளநாகனார்,

7 - * - .  . - * “வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ” என்று

சொல்லுதல் என்னும் பொருளில் அமைத்தார்.

வாய் - உண்மை

தீயன பயிலாத வாயின் இயல்பு உண்மை பேசுவதாகும் வாய் + மை என்பது உண்மை என்று பொருள் தரும் வாய்மை என்பதற்கு வாயின் தன்மை’ என்று தான் பொருள் அது இங்கு உண்மைத் தன்மையைக் குறிக்கிறது. தன்மையைக் குறிக்கும் பண்பு விகுதியாகிய ‘மை’ இல்லாமலே வாய் மட்டுமே உண்மையின் குறியீடாய் நிற்கும்.

ஒரு குமரி சோலையில் தன் தோழியுடன் ஊஞ்ச லாடிக் கொண்டிருந்தாள் அப்பக்கம் வந்த அவளுக்குகந்த குமரன் ஒருவனைப் பார்த்து ஊஞ்சலை ஊக்கிவிடு’ என்றாள் அவனும் வந்த வாய்ப்பை விடாமல் இசைந்து ஊஞ்சலை ஆட்டினான். அதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ள விரும்பிய அவள் நாணத்தால் அடிபட்டு மயங்கியவள் போன்று ஊஞ்சலிலிருந்து சாய்ந்தாள், பொய்யாகச் சாய்ந்தாள், அதிலும் அவன் மார்பில் சாய்ந்