பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ) வாய் - பெருமை, சிறுமை

வாய்மொழி

வாயுடன் சொல் சேர்ந்து பெருமை பெற்றது. வாயுடன் மொழி சேர்ந்து உண்மைப்பொருள் பெற்றது . வாய்மொழி என்றால் வாய் சொல்லும் மொழி வாயிலிருந்து வந்த மொழி என்றும் பொருள் வாய்மை’ என்பதில் ‘மை விகுதி போய் வாய் மட்டும் நின்று மொழியுடன் சேர்ந்து உண்மைப்பொருளை மொழிக்குத் தந்தது.

“வாய்மொழிப் புலவர்” என்னும் தொல்காப்பிய நூற்பா அடி உண்மை மொழிகளை மொழியும் புலவர்’ என்று பொருள் தந்து மொழிக்கு உண்மை உயிருட்டியது. மாங்குடி மருதனார் இதனை விளக்கமாக “பொய்யறியா வாய்மொழியால்’ புகழ் நிறைந்த நன்மாந்தர்” என்றார். திருவாய்மொழி என்பது அழகிய மறை (வேதம்) மொழி என்று பொருள் தந்து மறைச் சிறப்பை மொழிக்கு வழங்குகிறது.

இவ்வாறு சொல்லும் மொழியும் வாய் சேர்ந்து பெருமை பெற்றமைபோன்று, வாயுடன் பிற சொற்கள் வாய்க்குப் பெருமை தந்தன. பெருமை மட்டுமன்று, சிறுமையும் தந்தன . இப்பெருமை, சிறுமை வரலாற்றை