பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பட்டி மண்டப வரலாறு

என்றது. பிங்கல நிகண்டு. இங்குள்ள நான்கு பொருள் களில் விலங்கு துயிலிடம் தொழுவம்’ என்றும், பட்டி என்றும் கூறப்படும். அடுத்துள்ள கூட்டம்’, ‘குழு’ என்றும், ஒன்று கூடுவது என்றும் பொருள்தரும் . அடுத்துள்ள அவையைக் காண்கின்றோம். கூட்டம், அவையாகிய இரண்டும் பண்ணையைப்போல் பட்டி என்பதற்கும் வேண்டற்பாலன இவ்வகையில் இரண்டும் (பண்ணை, பட்டி ஒருவழியில் பொருந்துகின்றன.

பிங்கல விளக்கத்தில் மூன்றாவதாக நீர் விளை யாட்டு உள்ளது. முன்னரே தொல்காப்பியர்,

கெடவரல் பண்ணை ஆயிரண்டும்

o *

விளையாட்டு

என்று விதித்தார் இவ்விளையாட்டில் மகளிர் நீர் விளை யாட்டும் ஒன்று

“ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தென”

என்று ஐங்குறுநூறு பண்ணை பாய்ந்தென என்று நீரில் பாய்ந்து விளையாடுவதைக் குறித்தது. பண்ணும் படுவும்

பண்ணை நீர்நிலையைக் குறிப்பது போல் படு’ என்பதும்

பனிநீர்ப் படுவிற் பட்டினம்” என்பதில் படு, நீர்ப்பண்ணையாம் குளத்தைக் குறித்தது.