பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு | 177

உள்ளது . 200 அடிகளைக் கொண்ட இக்காதையில் மதுராபதி.உரையாற்றல் 156 அடிகள்.

ஒரு சொற்பொழிவு என்பது முன்னுள்ளாரை விளித்தல், அறிமுகம் செய்து கொள்ளல், எடுத்த கருத்துக்கு முன்னுரை சொல்லல், சான்று, உவமை, குட்டிக்கதைகள், பழமொழி, வண்ணிப்பு, அடுக்கு மொழிதல், கருத்தை விளக்கல் எடுத்த குறிக்கோளை நிறைவேற்றி முடிவுரை கூறி முடித்தல் எனும் அமைப்பில் இக்காலத்தும் விளங்குவதைக் கொண்டு நோக்கினால் மதுராபதி பேச்சில் இவை உள்ளன. பலர் கூடிய அவை மட்டும் இல்லை.

வடநாடு சென்று வென்று வந்த செங்குட்டுவன் அவையில் வீற்றிருந்தான். மாடலன் என்னும் மறையோன் பந்தான் . அவன் வருகையின் நோக்கமே செங்குட்டுவன் மேலும் போர்க்கள வேள்வி செய்யாது அறக்கள வேள்வி செய்யவேண்டும் என்னும் அறவுரை கூறுவதாகும்.

அறவுரை கூற அமர்ந்தவாறே கூறலாம். குறையாக் கேள்வி மாடலன் எழுந்து” நின்றான். எழுந்துநின்று உரையாற்றினான். எழுந்து,

“மன்னர் மன்னே” என்றுவிளித்தான்.

“அமைக நின் சீற்றம்”, “இகழாது என்சொற்கேட்டல்

வண்டும்” என்றான். இது சொற்பொழிவின் நோக்கத்திற்கு அடிகோலல். -