பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பட்டி மண்டப வரலாறு

| -

புது நூல் ஒன்றைப் படைக்கும் புலவர், அவை மேடையில் அமர்ந்து நூலைப் படித்து விளக்கங் கூறுவார். சான்றோர்அதனை ஏற்றுக்கொள்வர். அஃது'அரங்கேற்றம் எனப்பட்டது. இது புலமை அரங்கம்.

சூது வட்டு ஆடும் களத்தை அரங்கமாக,

• r * * & 76 “அரங்கின்றி வட்டு ஆடியற்றே”

என்று திருக்குறளும்,

“கட்டளை அன்ன வட்டு அரங்கு அமைத்துக் கல்லாச் சிறுவர் நெல்லிவட்டு ஆடும் ,77

என்று நற்றிணையும்,

“அரங்கினுள் வட்டுக் கரையிருந்தார்க் கெளியபோர்”

என்று பழமொழி நானூறும் பகர்கின்றன.

நம்மாழ்வார், அரங்கின் மல்லரைக்கொன்று”

என்று பாடி மற்போர்க் களத்தை அரங்கு என்று காட்டுகின்றார் . ஆற்றின் நடுவே மணல்மேடு இடப்பட்ட மேடைத்திட்டு ஆற்றிடைக்குறை ஆகும். •

“அரங்கமும் ஆற்றிடைக்குறையென அறைவர்"