பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு [...] 195

“தென்னவர் செம்பியர் தன்னடி போற்றத்

தமனிய மண்டபத்து (தமனியம் - பொன்) வேந்தன்

இருந்துழி” . என்று எழுதினார்.

சோழநாட்டு அரசனது ஆட்சி மண்டபம் சித்திர மண்டப” மாக விளங்கியது . இதன் சிறப்பால் இது பெறுவதற்கு அருமையான மண்டபம் என்னும் கருத்தில் “அரும்பெறல் மரபின் மண்டபம்” எனப்பட்டது . இதன் கலை நுணுக்கத்தைக் கண்டோர் இது மனிதனால் உருவாக்கப்பட்டதன்று, மயன் என்னும் தெய்வத் தச்சனால் ஆக்கப்பட்டது’ என்று புகழ்ந்தனராம்.

இவை அரண்மனையில் அமைந்த அரசாட்சி மண்டபங்கள். -

திருப்பரங்குன்றத்து முருகன் கோவிலில் ஓர் அழகிய மண்டபம் எழுந்தது . அதில் ஒவியங்கள் ஒளிர்கின்றன, சிற்பங்கள் சிறந்திருக்கின்றன; பலவகைப் புராணக்கதைகள் ஒவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன; சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன . இரதி, காமன் உருவம் திட்டப் பட்டுள்ளது . இந்திரன் பூனையாக வந்து அகலிகையைக் கூடியதும், அஃதறிந்த கெளதமன் சினந்து அகலிகையைக் கல்லுருவாக்கியதுமான கதை திட்டப்பட்டுள்ளது . இம் மண்டபத்தை “எழுத்துநிலை மண்டபம்” என்று பரிபாடல் பாடுகின்றது . இங்கு எழுத்து ஒவியத்தைக் குறிக்கும்.