பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி சொல், பெயர் ஆய்வு I 197

அங்கு மலர் தொடுப்பதற்காக ஒரு மண்டபம் இருந்தது. அது “மலர்மண்டபம்” எனப்பட்டது.

இவை சோலைகளில் எழுந்த மண்டபங்கள் . இச் சோலை மண்டபங்கள் நான்கு ஆறு, எட்டு துரண்களைக் கொண்டனவாய் சிறிய அளவில் எழுப்பப்பட்டவை . இவை நற்காட்சிகளைக் கண்டு மகிழ அமைக்கப்பட்ட பார்வை மண்டபங்கள். .

பட்டி மண்டபம்

இவ்வாறு எழுந்த மண்டபங்கள் யாவும் தத்தமது இயல்புக்கேற்ற அடைமொழி பெற்றமையைக் கண்டோம் . கட்டடம் ஏழுப்பப்பட்ட மதிப்பரிய பொருள்களால் பொன் மண்டபம், பளிங்கு மண்டபம், மணி மண்டபம் எனப்பட்டன. செய்யப்பட்ட கலை ஒப்பனைகளால் சித்திர மண்டபம், எழுத்துநிலை மண்டபம் எனப்பட்டன. நிகழ்ந்தநிகழ்ச்சியால் அடைமொழிபெற்றன. திருவோலக்க மண்டபம் வேத்தியல் மண்டபம் எனப்பட்டது . இவ் விரண்டு பெயரும் ஆட்சிக்கலை நிகழும் மண்டபத்தைக் குறிப்பன இங்கு வேந்தன் கொலுவீற்றிருந்து ஆட்சி செலுத்தும் நிகழ்ச்சியும் நிகழும் வழக்குகளை உசாவித் தீர்ப்பளிக்கும் நிகழ்ச்சியும் நிகழும். இவ்விரண்டு நிகழ்ச்சி களுள் கொலுவீற்றிருக்கும் நிகழ்ச்சி அன்றாடம் நிகழும் பெரும்பான்மை நிகழ்ச்சியாகும்.

இஃதே போன்று. இவ் விரண்டு வகையிலும் புலமை ஆய்வு, புலமை வழக்கு என்னும் புலமைக்