பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i88 பட்டி மண்டப வரலாறு

கலை நிகழும் மண்டபம் “பட்டி மண்டபம்” எனப் பட்டது.

எனவே,

பட்டி மண்டபம் என்பது புலமை ஆய்வுக்கும் புலமை வழக்குக்கும் உரிய இடமாகும் . இங்குப் பெருகிய நிகழ்ச்சியாக நாள்தோறும் புலமை ஆய்வு நிகழும். அருகிய நிகழ்ச்சியாக வாய்ப்பு நேரும்போது புலமை வழக்காடு தலாம் சொற்போர் நிகழும் . எனவே, புலமை ஆய்வுக்காக எழுந்த பட்டி மண்டபம் புலமை வழக்காடுதலுக்கும் இடமாகி அந்நிகழ்ச்சிக்கும் பெயராயிற்று.

புலமைக் கருத்தை வைத்து வழக்காடுவதுபோன்றதே மன்னன் முன்னர் குற்றம் வைத்து வழக்காடுவதும் ஆகும். எனவே, அவ்வாறான மண்டபமாம் திருவோலக்க மண்ட பமும் வழக்கை உசாவி அறியுங்கால் பட்டி மண்டபமாகக் குறி பெற்றது.

முன்னே விரிவாகக் கண்டபடி :

அரங்கம் என்பது மேடை.

மன்றம் என்பது அவை கூடும் கூடம்.

மண்டபம் என்பது இவ்விரண்டையும் கொண்ட

கட்டடம். -

இவற்றின் படி, - -

சொற்போர் புரிவோர் இருந்து சொற்போர் புரியும்

களமாகிய அரங்கம்