பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 T பட்டி மண்டப வரலாறு

இவர்கட்கு முன்னரே அடையாள இதழ் வழங்கப்பட்டது. இன்னோர் அவைக்கூடத்தில் தனிப்பகுதியில் அமர்த்தப்பெற்றனர். இன் னோர் கருத்துரைகளைச் செவிமடுத்து ஒரு கருத்திற்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப் பெற்றவர்கள்.

இயல்பான தொடக்க நிகழ்ச்சிகளாக இயக்குநர் அறிவிக்க குலுக்கு முறையில் தேர்ந்தெடுத்தபடி முதலில் தமிழ் வாழ்த்தும், அடுத்துப் பொதுச் சமய வாழ்த்தும் இசைக்கப் பட்டன. - -

இரு அணியினர் அமரும் இரு பகுதிகளிலும் முறையே ‘தமிழால் சமயம் வளர்ந்தது’ என்று எழுதப்பெற்ற கொடியும் சமயத்தால் தமிழ் வளர்ந்தது என்று எழுதப் பெற்ற கொடியும் நாட்டப்பட்டிருந்தன.

இயக்குநர் அழைப்பின்படி தமிழால் சமயம் வளர்ந்தது என்னும் அணித்தலைவர் மேடைக்கு வந்து ஒரு நாவல் கொம்பை நிலத்தில் ஊன்றிப்பிடித்து, கருத்தைமுன் வைத்து அறைகூவினார். எதிர் அணித்தலைவர் மேடைக்கு வந்து நாவல் கொம்பைப் பிடித்தவர் கையிலிருந்து வாங்கிக் கீழே வைத்தார் அறைகூவல் ஏற்றதாயிற்று . இதனை அறிவித்த இயக்குநர் வரவேற்புரை கூறிப் பணிவுடன் அழைக்க தவத்திரு குன்றக்குடி அடிகளார் மேடையில் ஏறினார்கள். அப்போது அவையினர் எழுந்து நின்று